மக்களவையில் மாஸ் காட்டிய பாஜக:19 கட்சிகளின் ஆதரவை பெற்ற ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா!
ஒரே நாடு ஒரே தேர்தலை அமலிற்கு கொண்டுவர மத்திய அரசு முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்ட குழுவை நியமித்தது இந்த குழுவின் பரிந்துரையின் படி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா உருவாக்கப்பட்டு இன்று அது மக்களவையில் ஒப்புதலுக்கு தாக்கல் செய்யப்பட்டது
அப்பொழுது எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் 19 மாநில கட்சிகள் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவளித்துள்ளது மேலும் இதற்கு முதல்முறையாக மின்னணு முறையில் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் 269 பேர் தங்கள் ஆதரவை செலுத்தியுள்ளனர் இந்தியாவில் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்றாலும் இந்த முறை மூலம் தேர்தல் செலவுகள் குறையும் மேலும் தேவையில்லாத பிரச்சார செலவுகளும் இதன் மூலம் குறையும்
ஆனால் எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் மக்களவையில் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் 269 பேர் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவளித்திருப்பது தற்பொழுது எதிர்க்கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது