டிஎன்பிஎஸ்சி உறுப்பினராக மாவோயிச ஆதரவாளர் பாதிரியார் - உடனடியாக நீக்க கோரிக்கை!

Update: 2021-07-14 07:13 GMT

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் பாதிரியார் ஒருவர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் ஒரு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். தற்போது இந்த அரசு பணியாளர் தேர்வாணையத்தில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தலைவராக இருக்கிறார். கிருஷ்ணகுமார், பாலுசாமி ஆகியோர் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

இதனால் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தில் உறுப்பினர் பதவிக்கு 12 இடங்கள் காலியாக இருந்தன. இவற்றை நிரப்பும் நோக்கில் நேற்று நான்கு பேர் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக தமிழக மனிதவள மேலாண்மைத் துறை செயலர் மைதிலி கே.ராஜேந்திரன் அரசாணை ஒன்றை வெளியிட்டார். அதில் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக ஐஏஎஸ் அதிகாரி எஸ்.முனியநாதன், பேராசிரியர் கே.ஜோதி சிவஞானம், முனைவர் கே.அருள்மதி மற்றும் ஏற்காடு டான் போஸ்கோ அருட்தந்தை ஏ.ராஜ் மரியசூசை ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டது.

டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் முதல்முறையாக பாதிரியார் ஒருவர் டிஎன்பிஎஸ்சியில் உறுப்பினராக பதவி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் சலேசிய கிறிஸ்தவ சபையைச் சேர்ந்தவர்‌. ஏற்காட்டில் உள்ள டான் போஸ்கோ அமைப்பில் பணியாற்றி வருகிறார். இந்த அமைப்பு அண்மையில் உயிரிழந்த மாவோயிஸ்ட் மற்றும் நக்சல் ஆதரவாளர் ஸ்டேன் லூர்துசாமியின் நினைவாக பழங்குடியினரை குறிவைத்து நிவாரண உதவிகள் வழங்கும் போர்வையில் மத மாற்றத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் பெண்களின் இடுப்பு மடிப்பு பற்றி பேசிய திண்டுக்கல் லியோனி பாடநூல் கழகத்தின் தலைவராக நியமித்த திமுக இப்போது நக்சல் ஆதரவாளரும் மதமாற்றத்தில் ஈடுபடுபவர் மான ஒரு பாதிரியாரை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக நியமித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக அரசோ பாஜக அரசோ ஒரு இந்துமத தலைவரை இதுபோன்று அரசு பதவியில் அமர்த்தினால் திமுக எவ்வளவு பிரச்சினை செய்திருக்கும் என்றும், மதச்சார்பற்ற அரசுப் பணியில் பாதிரியாரை நியமித்தது ஏன் இன்னும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Source : Hindu Tamil

Similar News