டெல்லிக்கு ஆபத்து? உளவுத்துறை எச்சரிக்கை!

Update: 2021-07-20 14:59 GMT

பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் தீவிரவாதிகள் சுதந்திர தினத்தன்று ட்ரோன்கள் மூலம் டெல்லியில் பல இடங்களில் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறை டெல்லி காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.





ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவில் சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் விதமாக பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் தீவிரவாத இயக்கங்கள் இந்தியாவில் தாக்குதல் நடத்த இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்த தாக்குதல் ட்ரோன்கள் மூலம் நடத்தப்படலாம் என்றும் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக டெல்லி காவல்துறையினர் உஷார் நிலையில் இருக்குமாறு உளவுத்துறை தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து டெல்லியில் டுரோன் கட்டுப்பாட்டு மையம் ஒன்றை விமானப்படையினர் உருவாக்கி உள்ளனர். அதன் மூலம் டுரோன்களின் செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. காவல்துறை மற்றும் துணை ராணுவப்படையினரின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபகாலமாக பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத இயக்கங்கள் ஜம்மு காஷ்மீரில் சில பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி செய்து வருகிறது.

இந்திய ராணுவப் படையினரின் துரித நடவடிக்கையின் காரணமாக ட்ரோன்கள் மூலம் நடத்தப்படும் தாக்குதல்கள் அனைத்தையும் முறியடித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் விதமாக டெல்லியில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து டெல்லியில் பாதுகாப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Similar News