ஜாதி மதம் குறித்தும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் முறையிலும், மதநம்பிக்கையை சிறுமைப்படுத்தும் விதமாகவும் பேசிய பாதிரியார் மிது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து தனது பேச்சுக்கு ஜார்ஜ் பொன்னையா வருத்தம் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெற்ற ஜெப கூட்டத்தில் பேசிய கிறிஸ்தவ மத போதகர் ஜார்ஜ் பொன்னையா இந்து மத நம்பிக்கைகளை அவதூறாகவும், பாரத மாதாவை அவமதிக்கும் விதமாகவும், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா இறுதி காலம் மிகவும் பரிதாபமாக இருக்கும் என்றும் பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து ஜார்ஜ் பொன்னையா மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் ஜார்ஜ் பொன்னையா கைது செய்ய வாய்ப்பு அதிகமாக உள்ளதால் தான் பேசியது தவறு என்று ஜார்ஜ் பொன்னையா அதற்கு மன்னிப்பு கோரியுள்ளார். மேலும் இதுபோன்ற சம்பவம் வருங்காலங்களில் நடைபெறாது என்றும் கூறியுள்ளார். ஜார்ஜ் பொன்னையா மீது தமிழகம் முழுவதும் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக பாதிரியார் மன்னிப்புக் கோரியுள்ளார்.
பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை மிகவும் தரக்குறைவாக பேசியதற்கும், பாரத அன்னையை இழிவாக பேசியதற்கும் ஜார்ஜ் பொன்னையா மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.