ஓடி ஒளிந்த பாதிரியார் - மடக்கிப்பிடித்து பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு!

Update: 2021-07-25 01:00 GMT

மத உணர்வை தூண்டி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் சேவையில் ஈடுபட்ட கன்னியாகுமரியை சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை காவல்துறையினர் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அருமனையில் நடந்த மதக் கூட்டத்தில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா இந்து மதத்தைப் கேவலப்படுத்தையும், பாரத மாதாவை இழிவுபடுத்தும் விதமாகவும், பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவை அவதூறாகவும் பேசினார். இதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஜார்ஜ் பொன்னையாவை உடனடியாக கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பல்வேறு காவல் நிலையங்களில் ஜார்ஜ் பொன்னையா மீது புகார் அளிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் உள்ள காவல் நிலையத்தில் ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பொது மேடையில் கைதட்டலுக்காக உணர்ச்சிவசப்பட்டு பேசிய ஜார்ஜ் பொன்னையா காவல்துறையினருக்கு பயந்து விருதுநகர் மாவட்டத்தில் ஓடி ஒளிந்து கொண்டார். பாதிரியார் தலைமறைவானதை தொடர்ந்து அவரது உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் அவரை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை 7.30 மணிக்கு விருதுநகர் மாவட்டம் கள்ளிக்குடியில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை விருதுநகர் மாவட்ட காவல்துறையினர் கைது செய்து கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையிடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து பாதிரியாரை நீதிமன்றக் காவலில் 15 நாட்கள் வைக்க உத்தரவிட்டதை அடுத்து பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

Similar News