அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்த அதிசயம் - தூத்துக்குடியில் பரபரப்பு!

Update: 2021-07-25 01:00 GMT

தூத்துக்குடி மாவட்டம் கோற்கையில் நடைபெற்றுவரும் அகழ்வாராய்ச்சியில் 10 அடுக்குகள் கொண்ட செங்கல் கட்டடம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோற்கையில் தமிழக தொல்லியல் துறை சார்பாக ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 29 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இந்த அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த அகழ்வாராய்ச்சி பணிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொற்கை மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

கொற்கை அகழாராய்ச்சி கள ‌ இயக்குனர் தங்கதுரை தலைமையில் இங்கு நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணியின் போது மொத்தம் 17 குழிகள் தோண்டப்பட்டு உள்ளது. இன்று அகழ்வாராய்ச்சி பணி தொடங்கிய போது அங்கு பத்து அடுக்குகள் கொண்ட செங்கல் கட்டடம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் இந்த பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளத்தை உறுதிப்படுத்தும் விதமாக இரும்பு உருக்குகள், கண்ணாடி மணிகள் மற்றும் தொழில் கூடங்கள் அமைப்புகளும் இங்கு கண்டு பிடிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கொற்கையில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் போது பத்து அடுக்குகள் கொண்ட செங்கல் கட்டடம் கண்டுபிடிக்க பட்டுள்ளதால் அங்கு மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் தெரிய வந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் அகழ்வாராய்ச்சி பணி பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நன்றி: தினமணி

Similar News