தனி ஆளாக போராடி போலீஸை மன்னிப்பு கேட்க வைத்த பா.ஜ.க நிர்வாகி - குவியும் பாராட்டு!
ஆர்.எஸ்.எஸ் தேசியத் தலைவர் மோகன் பகவத்தை அவதூறாக பேசிய காவல்துறை துணை ஆணையரை தனி ஆளாக போராடி மன்னிப்பு கேட்க வைத்த பா.ஜ.க நிர்வாகிக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து உள்ளது.
மதுரை தல்லாகுளம் உதவி ஆணையராக இருப்பவர் அக்பர் கான். இவர் ஆர்.எஸ்.எஸ் தேசியத் தலைவர் மோகன் பகவத்தை அவதூறாக பேசியுள்ளார். இதனைக் கண்டித்த மதுரை மாநகர மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் பிரவீன் ராஜ் ஒற்றை ஆளாக காவல்துறை இணை ஆணையர் அக்பர்கானின் காரின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு இணை ஆணையரை மன்னிப்பு கேட்க வைத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தனி ஆளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறை அதிகாரியை மன்னிப்பு கேட்க வைத்த மாவட்ட இளைஞர் அணி துணைத் தலைவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஆர்.எஸ்.எஸ் தலைவர் 3 நாள் சுற்றுப்பயணமாக மதுரை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு அவருக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.