திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்து சில மாதங்களே ஆகியிருக்கும் நிலையில் இந்து விரோத கட்சி என்ற பெயரைக் காப்பாற்றும் வகையிலான செல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
திமுக வெற்றிக்குப் பின்னர் இந்து கடவுள்களையும், இந்து சாஸ்திர சம்பிரதாயங்களையும் இழிவுபடுத்துவதையே முழு நேர வேலையாக செய்து கொண்டிருக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்து விரோத போக்கை தீவிரப்படுத்தியுள்ளனர். பல ஆண்டுகளாக 'இந்து சமய அறநிலையத்துறை' என்று பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்து என்ற வார்த்தையை நீக்கிவிட்டு 'அறநிலையத்துறை' என்று கன்னியாகுமரி மாவட்டத்தில் அறிவிப்பு பலகை ஒன்றை வைத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 70 சதவீதம் கிறிஸ்தவர்கள் இருப்பதாகவும் அவர்கள் போட்ட பிச்சையில் தான் திமுக வெற்றி பெற்றது என்று மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தற்போது இந்து என்ற வார்த்தை நீக்கப்பட்டு கன்னியாகுமரியில் இந்து அறநிலையத்துறை அறிவிப்பு பலகை வைத்திருப்பது யாரை சந்தோசப் படுத்துவதற்காக என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதேபோல் பெண்களின் இடுப்பை பற்றி கேலி செய்த கிறிஸ்தவரான திண்டுக்கல் லியோனியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் தலைவராக நியமித்துள்ளனர். இவர் தரும் ஆலோசனையின் பேரில் பாடப்புத்தகங்களில் என்னவெல்லாம் மாற்றங்கள் ஏற்பட போகிறது என்று பெற்றோர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
தற்போது கள்ளக்காதலுக்கு ஆதரவாக பேசி வருபவரும் கள்ளக்காதலுக்கு புது விளக்கம் கொடுத்தவரும், இந்துக் கடவுளை கும்பிடுவது மட்டுமே மூட நம்பிக்கை என்று சமூக வலைதளங்களிலும் மேடைகளில் பேசி வரும் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த சுப வீரபாண்டியனை தமிழ்நாடு பாடத்திட்ட நிறுவன அறிவுரைக் குழு உறுப்பினராக தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. குழந்தைகள் படிக்கும் பாடப் புத்தகங்களில் இவர் என்னவெல்லாம் அறிவுரை தரப்போகிறார் என்று நினைத்து பார்க்கவே முடியவில்லை என்று பெற்றோர்களும் ஆசிரியர்களும் தெரிவித்து வருகின்றனர்.