கம்யூனிஸ்ட் தோழர்களால் சூறையாடபட்ட வழக்கறிஞர் வீடு ! உள்ளாட்சி தேர்தல் தோல்வியால் விரக்தி !
உள்ளாட்சி தேர்தலில் தங்களுக்கு எதிராக வேலை செய்த வழக்கறிஞ்சரை வீட்டை கம்யூனிஸ்ட் கட்சியினர் அடித்து உடைத்துள்ளனர்.
தங்களை எதிர்த்து வேலை செய்த வழக்கறிஞர் வீட்டை கம்யூனிஸ்ட்கட்சியினர் அடித்து உடைத்துள்ளனர்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் தோழர்களின் அடாவடி செயல்களும் அரங்கேறியுள்ளன.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தனங்கல் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டதுணை செயலாளராக உள்ளார். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ராமசாமியின் மனைவி அலமேலு வார்ட் உறுப்பினர் பதவிக்கும், கோவிந்த சாமி என்பவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.
இவர்களுக்கு எதிராக செம்மலை என்ற வழக்கறிஞர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நடைபெற்று முடிந்த வாக்கு எண்ணிக்கையில் இருவரும் சொற்ப வாக்குகள் வித்யாசத்தில் தோல்வியை தழுவினர்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் செம்மலையின் வீட்டிற்கு சென்றனர். அவர் அங்கு வந்த கும்பலை கண்டு பயந்து கதவை உள்பக்கமாக தாழிட்டு கோண்டுள்ளார். அப்போதும் அவரை விடாத தோழர்கள் அவர் வீட்டு வாசலில் இருந்த சிலிண்டரால் அவர் வீட்டை அடித்து உடைத்துள்ளனர்.
இதனை அடுத்து வழக்கறிஞர் செம்மலை இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து ராமசாமி அவரது மகன்கள் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். சாமானிய மக்களுக்காக போராடுபவர்கள் என தங்களை பறை சாற்றி கொள்ளும் கம்யூனிஸ்டுகள் இது போன்ற செயல்களில் ஈடுப்பட்டு வருவது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.