மோடி அரசின் சீரிய முயற்சியால் தவிக்கும் மாணவர்களை மீட்க முதற்கட்டமாக இரண்டு விமானங்கள்
இந்திய மாணவர்களை அழைத்து வரும் முயற்சியில் மத்திய அரசு பரபரப்பாக இயங்கி வருவதால் இன்று இரு விமானங்களை அனுப்பி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது அங்குள்ள பல்வேறு நாட்டு மக்கள் தொடர்ந்து பீதியில் உறைந்துள்ளனர், இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் உக்ரேனில் தவிக்கும் இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்டு கொண்டுவர வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை அனுப்பி வந்தனர். இந்நிலையில் மாணவர்களை பத்திரமாக மீட்டு அழைத்து வரும் முயற்சியில் மோடி தலைமையிலான அரசு பரபரப்பாக இயங்கி வருகிறது.
இந்த சூழலில் ருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட், ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் ஆகிய இரண்டு நகரங்களுக்கு என இரு விமானங்கள் இயக்கப்பட உள்ளது முதல் கட்டமாக ருமேனியா தலைநகரில் இருந்து இந்தியர்களை அழைத்து வர ஏர் இந்தியா விமானம் இன்று 3:30 மணிக்கு மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
உக்ரைனில் இருந்து ருமேனியா வந்த சிறப்பு விமானத்தில் இந்தியர்கள் மும்பைக்கு அழைத்து வரப்படுகின்றனர். மும்பைக்கு அழைத்து வரப்படும் இந்தியர்களில 5 பேர் தமிழர்கள் எனவும் மொத்தமாக முதற்கட்டமாக 219 பேர் அழைத்து வரப்படுகின்றனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.