முடிவுக்கு வருமா போர்: உக்ரைன், ரஷ்யா விவகாரம் குறித்து ஐ.நா. பொதுசபையில் இன்று பேச்சு!

கடந்த 40 ஆண்டுகள் இல்லாத நிலையில் ஐநா பொதுசபையில் அவசர கூட்டம் கூட்டப்படுகிறது. இதில் 11 நாடுகள் ஆதரவு அளித்த நிலையில் இதனை ரஷ்யா எதிர்த்து வருகிறது.

Update: 2022-02-28 02:51 GMT

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் போர் தொடுத்து வருகிறது. முக்கிய நகரங்கள் மீது ஆக்ரோஷமான முறையில் குண்டுமழை பொழிந்து வருவதால் மக்கள் உயிர்களை காப்பாற்றிக்கொள்ள மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைகளில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில் இன்று (பிப்ரவரி 28) ஐநா பொதுசபை கூட்டம் நடைபெறுகிறது.


ரஷ்யா, உக்ரைன் போர் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஐக்கிய நாடுகளின் பொதுசபை கூட்டம் இன்று அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் அவசராக கூட உள்ளது. கடந்த 40 ஆண்டுகள் இல்லாத நிலையில் ஐநா பொதுசபையில் அவசர கூட்டம் கூட்டப்படுகிறது. இதில் 11 நாடுகள் ஆதரவு அளித்த நிலையில் இதனை ரஷ்யா எதிர்த்து வருகிறது.

Source: Dinamalar

Image Courtesy: The New York Times

Tags:    

Similar News