சல்மான் கானின் முன்னாள் காதலி சோமி அலி 'பாலிவுட்டின் ஹார்வி வெய்ன்ஸ்டீனை' அம்பலப்படுத்துவேன் என்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் மிரட்டி பின்னர் அதை நீக்கிய விவகாரம் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாகியுள்ளது.
சல்மான் கானின் முன்னாள் காதலி சோமி அலி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் 'பாலிவுட்டின் ஹார்வி வெய்ன்ஸ்டீன்' குறித்து எச்சரிக்கும் ஒரு ரகசிய பதிவை வெளியிட்டார். 30 மார்ச் 2022 அன்று, அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவுடன் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டார், இது சல்மான் கானின் முதல் படமான 'மைனே பியார் கியா'வின் ஸ்டில் படமாகும்.
'ஹார்வி வெய்ன்ஸ்டீன்' திரைத்துறையில் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஹாலிவுட்'டின் பிரபல தயாரிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார் அவரை சல்மானுடன் ஒப்பிட்டு பாலிவுட் திரை உலகின் பாலியல் தொல்லைகளை குறிப்பிட்டு சூசகமாக கூறியதாக தெரிகிறது.
அந்த புகைப்படத்தின் தலைப்பில், "பாலிவுட்டின் ஹார்வி வெய்ன்ஸ்டீன்! நீங்கள் வெளிப்படுவீர்கள். நீங்கள் துஷ்பிரயோகம் செய்த பெண்கள் ஒரு நாள் வெளியே வந்து தங்கள் உண்மையைப் பகிர்ந்து கொள்வார்கள். ஐஸ்வர்யா ராய் பச்சனைப் போலவே" என பகிரங்கமாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சர்ச்சைகளை கிளப்பிய சில நேர அவகாசத்தில் இந்த பதிவை அவர் நீக்கிவிட்டார்.
புகைப்படத்தைப் பற்றி கருத்துத் தெரிவிக்கையில், இந்தியாவின் முதல் திருநங்கை மாடல் நிக்கி சாவ்லா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், "அந்தப் பெண்கள் அனைவரும் என்ன செய்திருப்பார்கள் என்று ஒரு நொடி கூட கற்பனை செய்து பார்க்க முடியாது… அந்த உணர்ச்சிகரமான அதிர்ச்சி. உங்கள் குரலை உயர்த்தியதற்கு என் அன்பே உங்களுக்குப் பாராட்டுகள்" என குறிப்பிட்டது மட்டும் அல்லாமல் அந்த பதிவில் ஐஸ்வர்யா ராய் பச்சனையும் நிக்கி சாவ்லா டேக் செய்திருந்தார்.