பென்டகனில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு உற்சாக வரவேற்பு!
அமெரிக்கா சென்றிருக்கும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு பென்டகனில் மிகச்சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இந்தியா பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜாநாத் சிங், இரண்டு நாட்டு பரஸ்பர வெளியுறவு கொள்கை மற்றும் ராணுவம் சார்ந்த பாதுகாப்பு குறித்து விவாதிக்க உள்ளார்.
இதற்கிடையில் அமெரிக்கா ராணுவ தலைமை அலுவலகமான பென்டகனுக்கு சென்ற இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அமெரிக்க ராணுவ அமைச்சர் லாயிட் ஆஸ்டின் வரவேற்று அழைத்து சென்றார்.
Source, Image Courtesy: Dinamalar