விழுப்புரத்தில் மீண்டும் கிளம்பிய பிரச்சனை!! பிரச்சனையை தீர்த்து வைக்க பொங்கி எழுந்த பொன்முடி!!

By :  G Pradeep
Update: 2025-11-13 07:14 GMT

இன்னும் ஆறு மாதங்களில் தமிழகத்தில் தேர்தல் வரை இருக்கும் நிலையில் உன்னால் அமைச்சர் பொன்முடி மீண்டும் துணை பொதுச்செயலாளர் ஆக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதற்கு முக்கிய காரணம் எந்தவித பிரச்சனையும் தேர்தல் நேரத்தில் நடக்காமல் இருப்பதை தவிர்ப்பதற்காக தான். ஆனால் தற்பொழுது பொன்முடிக்கும் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளரான லட்சுமணன் எம்எல்ஏக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 

இந்த 11ம் தேதி SIR கண்டித்து விழுப்புரம் பகுதியில் இண்​டியா கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் ஆனது லட்சுமணனின் மத்திய மாவட்ட எல்லைக்குள் இருந்ததால் அவரே எல்லா வேலைகளையும் செய்தார். இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்திற்காக அச்சிடப்பட்ட நோட்டீஸில், கூட்டணி கட்சியான விசிகவின் செயலாளரான ரவிக்குமாரின் எம்பி யின் பெயரும், திமுகவின் மாநில விவசாய தொழிலாளர் அணியின் செயலாளர் அன்னியூர் சிவா எம்எல்ஏவின் பெயரையும் சிறிய அளவில் அச்சிடப்பட்டிருந்ததாக சர்ச்சை கிளம்பியது. 

இந்த சர்ச்சையில் தலையிட்ட பொன்முடி லட்சுமணனை தொடர்புகொண்டு ரவிக்குமாரின் பெயரை எதற்காக முன்னிலையில் போடவில்லை என்றும், சிவாவின் பெயரை எதற்காக வரவேற்புரையில் போடவில்லை என்றும், எம்எல்ஏவான புஷ்பராஜ்க்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மேலும் நோட்டீசை இறுதி செய்வதற்கு முன்பாக மண்டல பொறுப்பாளரான அமைச்சர் எம்​.ஆர்​.கே.பன்​னீர்​செல்​வத்​துக்கு அனுப்பி ஒப்புதல் கேட்டீர்களா என்று கேள்வி எழுப்பினார். 

இந்த நிலையில் அந்த நோட்டீசை அப்படியே வைத்துவிட்டு புதிய நோட்டீஸ்சில் அவர்களின் பெயர்களை பெரிதாக அச்சிட்டு லட்சுமணன் தரப்பில் விநியோகம் செய்யப்பட்டது. பொன்முடிக்கு மீண்டும் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பை வழங்கி விட்டால் விழுப்புரத்தில் எந்தவித பிரச்சனையும் ஏற்படாது என்று திமுக தரப்பில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு எதிராக தற்போது புதிது புதிதாக பிரச்சனைகள் தோன்றி வருகிறது. 

Tags:    

Similar News