வங்கி மேலாளரிடம் பணம் பறித்த திமுக பிரமுகர் கைது!! திருச்சியில் நடந்த சம்பவம்!

By :  G Pradeep
Update: 2025-11-27 15:41 GMT

திருச்சி மாவட்டம் அகிலாண்டபுரம் தாயுமானவர் தெருவை சேர்ந்த சிவா என்பவர் குளித்தலை காவல் நிலையத்திற்கு அருகில் இருக்கும் தனியார் வங்கியில் மேலாளராக வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பெண் ஒருவர் நகை அடகு வைத்து பணம் பெற்றதாகவும் அதன் பிறகு வங்கிக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 

இந்த பிரச்சனையை அறிந்து கொண்ட இரும்பூதிப்பட்டி காலனியை சேர்ந்த தி.மு.க பிரமுகர் பிச்சைமுத்து வங்கியின் மேலாளர் சிவாவிடம் பெண்ணுக்கும் வங்கிக்கும் ஏற்பட்ட பிரச்சனையை தீர்த்து வைப்பதாக கூறி ரூ.10000 பெற்ற நிலையில் மேலும் மேலாளரை மிரட்டி பணம் கேட்டுள்ளார்.

இந்நிலையில் மேலாளர் சிவா அவர் மீது குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் திமுக பிரமுகர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தார். இந்த செய்தி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

Similar News