கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் கொலை!! திமுக ஆட்சியில் காவல்துறை செயலிழப்பு!!

By :  G Pradeep
Update: 2026-01-13 09:30 GMT

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், பிரசவ வார்டின் எதிரே உறங்கிக்கொண்டிருந்த பிரபல ரௌடி ஆதி நேற்று வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இது குறித்து போலீஸ்சார் வழக்கு பதிவு செய்து வந்த நிலையில், சூர்யா மற்றும் அவர் நண்பர்களான அலிபாய், கார்த்திக் ஆகிய மூன்று பேர் சேர்ந்து இந்தக் கொலையை செய்ததாக உறுதிப்படுத்தியிருக்கிறது.


அரசு மருத்துவமனை உள்ளேயே புகுந்து செய்யப்பட்ட இந்தக் கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை ஆகியோர் திமுக ஆட்சியில் காவல்துறை முழுமையாக செயலிழந்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். 

Tags:    

Similar News