இந்தியாவில் இஸ்லாமிய மக்கள் பாதுகாப்பாக உள்ளதாக மதத்தலைவர் உறுதி!!

Update: 2026-02-18 09:28 GMT

கேரளாவை சேர்ந்த மதத்தலைவர் சயீத் இப்ராஹீம் கலீல் அல் புகாரி, இந்தியாவில் இஸ்லாமிய மக்கள் பாதுகாப்பாக உள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


அவர் மதீன் அகாடமியின் நிறுவனத் தலைவராகவும், கேரள மாநிலத்தின் முஸ்லீம் ஜமாத்தின் பொதுச் செயலாளராகவும் உள்ளார்.


இந்தியா ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற நாடு என்றும், அதன் குடிமக்கள் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் நீதியை உத்தரவாதம் செய்யும் அரசியலமைப்புச் சட்டம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.


நாட்டில் கோடிக்கணக்கான மக்களுக்கு சேவை செய்யும் வலுவான நீதி அமைப்பு உள்ளதால், இந்தியாவில் இஸ்லாமிய மக்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று அவர் உறுதியாக நம்புவதாக தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News