பவானிப்பூர் இடைத்தேர்தல்!! சுவேந்து அதிகாரி மனுத்தாக்கல்!!

Update: 2026-04-03 14:37 GMT

பவானிப்பூர் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக சுவேந்து அதிகாரி மனுத்தாக்கல் செய்த நிலையில், மத்திய அமைச்சர் அமித் ஷா அவருடன் இணைந்து ஊர்வலமாக பவானிப்பூரில் வாகனப் பேரணி நடத்தினர்.


பாஜக தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு வாகன பேரணிக்கு மலர் தூவி வரவேற்பு அளித்து, ஜெய் ஸ்ரீ ராம், பாஜக வாழ்க போன்ற  கோஷங்கள் முழங்க தொண்டர்கள் அணிவகுத்து சென்றனர்.


ஹஸ்ரா பகுதியில் பாஜக தொண்டர்களிடம் பேசிய அமித் ஷா, சுவேந்து அதிகாரியின் மனுத்தாக்கலுக்காக பவானிப்பூர் வந்ததாக கூறினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் மனித சங்கிலி அமைத்து இரு கட்சியினர் இடையே மோதல் நடைபெறாமல் பார்த்துக் கொண்டனர்.

Tags:    

Similar News