ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவிற்கு எதிராக வன்மத்தை பரப்பும் பிரிவினைவாதிகள் - தஞ்சையில் போராட்டம் அறிவிப்பு!

Update: 2021-04-14 08:12 GMT

தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் சரியாக பராமரிக்கப்படவில்லை என்பது கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் யாவரும் அறிந்த ஒன்றே. தமிழகத்தில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாகவே, பல்வேறு தருணங்களில் அரசு கோவில்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த வண்ணமே இருந்துள்ளது.

நம் தமிழ் கோவில்கள் வெறும் ஆன்மீகத் தலமாக மட்டுமில்லாமல், வரலாறு, கலை, இலக்கியம் என தமிழ் பொக்கிஷ பெட்டகமாகவே இருந்து வருகிறது. மேலும் பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மற்றும் விலைமதிப்பற்ற சிலைகளும் உள்ளன. இவை எல்லாம் கடந்த 50 ஆண்டு கால திராவிட ஆட்சியில் சிதைந்து அழிந்து வருகிறது என யுனஸ்கோ அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டுகிறது.

https://m.timesofindia.com/city/chennai/historic-tn-temples-fallinginto-decay-unesco-report/amp_articleshow/60027074.cms

இதை விட அதிர்ச்சிகரமான தகவல்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கோவில்களை பராமரிக்க வருமானம் இல்லை, ஒரு கால பூஜை கூட செய்வதில்லை என்ற ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளது.

https://www.google.com/amp/s/www.thehindu.com/news/national/tamil-nadu/11999-temples-have-no-revenue-to-perform-puja-hrce-tells-madras-high-court/article32127028.ece/amp/

இந்நிலையில் தான் கோவில் அடிமை நிறுத்து என்ற இயக்கத்தை சத்குரு அவர்கள் துவங்கினார். 50 ஆண்டு கால கோரிக்கை சத்குரு கையில் எடுத்து பின்னர் முக்கியத்துவம் பெற தொடங்கியது. பிரபலங்கள் முதல் சாமானியர்கள் வரை பலர் இவ்வியகத்திற்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இதற்கு கிடைத்து வரும் பெரும் ஆதரவை கண்டு பொறுக்காத பிரிவினைவாத கூட்டம் ஒன்று கூடி சத்குருவிற்கு எதிராக செயல்பட ஆரம்பித்துள்ளது.

அதின் ஒரு பகுதியாக இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த 'அந்த பிரிவினைவாத கூட்டம்' ஈஷாவை அரசுடமையாக்க வேண்டும் என்ற விசயத்தை கையில் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்காக மே மாதம் 8 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் ஒன்றையும் திட்டமிட்டு உள்ளதாக கூறியுள்ளனர்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சத்குருவின் மீது அவதூறான கருத்துக்களை பதிவு செய்து அவரின் மீதான வன்மத்தையும் பதிவு செய்தனர்.. இந்த கூட்டத்தில் தமிழ் தேசிய பேரியக்கத்தை சேர்ந்த பெ.டேவிட் மணியரசன், ஹிந்து என்று கேட்டாலே எரிச்சலாக இருக்கிறது என்று சொன்ன கலையரசி நடராஜன் என ஹிந்து மதத்தின் மீதான வெறுப்பை தொடர்ந்து பரப்பக்கூடியவர்கள் மட்டுமே பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

அரசே வருமானம் இல்லாமல் கோவில்களை நடத்த முடியவில்லை என்று கூறிய பின்னரும் கூட, இந்து மதம் மீதான வெறுப்பாளர்கள் ஒன்று கூடி இந்து கோவில்கள் அரசு கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் என்று சொல்வது, இவர்களின் நோக்கம் கோவில்களை தொடர்ந்து அழிய விடுவது தானோ என்று எண்ணத் தோன்றுகிறது.

மேலும் இவர்கள் எல்லாம் தி.மு.க வின் ஆதரவாளர்கள் என்பதால், தேர்தல் முடியும் வரை வேல் வைத்து வேஷம் போட்டுவிட்டு தற்போது திமுக அதன் படை பரிவாரங்களை களம் இறக்கி உள்ளதோ என்ற ஐயமும் எழுந்துள்ளது.

Similar News