அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக மத்திய அரசு கொண்டுவந்த புதிய போர்டல்

Update: 2024-11-18 09:01 GMT

சமூகத் துறைத் திட்டங்களின் பலன்களை அமைப்புசாராத் துறைத் தொழிலாளர்களுக்கு ஒரே இடத்தில் வழங்குவதற்காக மத்திய அரசு இ-ஷ்ரம் ஒன் ஸ்டாப் சொல்யூஷனை அறிமுகப்படுத்தியுள்ளது

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா ஆயுஷ்மான் பாரத்-பிரதான் மந்திரி ஜன் உட்பட 12க்கும் மேற்பட்ட திட்டங்கள் ஆரோக்கிய யோஜனா PM-ஸ்வாநிதி MGNREGA பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் ரேஷன் கார்டு திட்டமும் இதில் ஒருங்கிணைக்கப்பட்டது

மேலும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான அனைத்து சமூக பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்கள் பற்றிய தகவல்களை ஒரே மேடையில் ஒருங்கிணைத்தல் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அமைப்புசாரா துறை தொழிலாளர்கள் தொடர்பான திட்டங்கள் மற்றும் பலன்களை இ-ஷ்ரம் தளத்தில் கொண்டு வருமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது

அதுமட்டுமின்றி இ-ஷ்ரம் போர்ட்டலில் 29.6 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர் அவர்களில் 53 சதவீதம் பேர் பெண்கள் பதிவு செய்தவர்களை அவர்களின் வயதுக்கு ஏற்ப வகைப்படுத்தினால் அவர்களில் 45% பேர் 25-40 வயதுக்குட்பட்டவர்கள் அதேசமயம் பதிவு செய்த தொழிலாளர்களில் 52% பேர் விவசாயத் துறையுடன் தொடர்புடையவர்கள்

Tags:    

Similar News