டெல்லியில் குண்டுவெடிப்பு நடப்பதற்கு முன்பாக 10 நாட்களாக நூ நகரில் பதுங்கி இருந்த உமர்! அதிகாரிகள் தகவல்!!

By :  G Pradeep
Update: 2025-11-17 07:44 GMT

டெல்லி கார் குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் என்ஐஏ அதிகாரிகள் சில தகவல்களை தெரிவித்துள்ளனர். அதாவது ஹரியானாவின் பரிதாபாத் பகுதியில் உள்ள அல்பலா மருத்துவமனையில் டாக்டர் உமர் முகமது பணியாற்றி வந்துள்ளதாகவும், அங்கு பணியாற்றிய சக மருத்துவர்கள் கைது செய்த பிறகு உமர் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார்.

 இதன் தொடர்ச்சியாக ஹரியானாவில் இருக்கும் நூ நகர் பகுதியில் 10 நாட்களாக பதுங்கி இருந்த அவர் ஹிதா​யத் காலனி​ பகுதியில் ஒரு வீட்டில் இருந்து வந்துள்ளார். அவர் பதுங்கியிருந்த வீடானது அந்த மருத்துவமனையில் பணியாற்றி வரும் சோகிப்​பின் உறவினர் வீடு என்றும், சோகிப் கைது செய்துவிட்டதாகவும் வீட்டின் உரிமையாளர் தலைமறைவாகிய நிலையில் அவரைத் தேடி வருவதாகவும் கூறுகின்றனர். இதைத்தொடர்ந்து உமர் கடந்த ஒன்பதாம் தேதி பொருள் நிறைந்த காரினை எடுத்துக்கொண்டு அருகில் இருந்த ஏடிஎம் இருக்கு சென்றுள்ளார். 

அங்கு ஏடிஎம் செயல்படாததால் பணம் எடுக்க முடியாமல் வேறொரு ஏடிஎம் இருக்கு சென்று பணம் எடுத்து விட்டு நேரடியாக டெல்லிக்கு வந்த நிலையில் குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக அடுத்தடுத்து பல டாக்டர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் காஷ்மீர், உத்திர பிரதேசம் மற்றும் ஹரியானாவில் பணியாற்றும் மருத்துவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

காஷ்மீரை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணியாற்றி வரும் நிலையில் அவர்களிடம் விசாரணை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 30க்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு சம்பந்தம் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் விரைவில் அவர்களை கைது செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Tags:    

Similar News