இந்துக் கடவுள்கள் இல்லை என்று கிறிஸ்துமஸ் மதப் பிரச்சாரம் - அதிகரித்து வரும் மிஷனரிகளின் ஆட்டம்!
கிறிஸ்துமஸ் அன்று பரிசு வழங்குவது போல் கிறிஸ்தவ மிஷனரிகள் இந்துக்களிடம் மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றதற்கு இந்து முன்னணி அமைப்பினர் கண்டனம் தெரிவித்து பல்வேறு இடங்களில் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
டிசம்பர் 25 அன்று கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் தமிழகத்தில் கிறிஸ்துமஸ் விழாவை காரணம் காட்டி மதமாற்றம் கும்பல் தங்களது கைவரிசையை காட்டி உள்ள சம்பவம் பல்வேறு இடங்களில் நடைபெற்றுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் இயங்கிவரும் கிறிஸ்தவ மருத்துவமனையில் கிறிஸ்துமஸ் பரிசளிப்பதாக கூறி இந்து சிறுவர் சிறுமிகளை அழைத்து அவர்களிடம் மருத்துவமனை நிர்வாகம் மதம் மாற்றும் நோக்கத்தில் பேசியதாக இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. தகவல் அறிந்து மருத்துவமனைக்கு சென்ற இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மருத்துவமனை நிர்வாகத்தை தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் மாத்தூர் பகுதியில் உள்ள காமராஜ் நகருக்குள் புகுந்த கிறிஸ்தவ மிஷனரிகள் மதம் மாற்றும் நோக்கத்துடன் அங்குள்ள இந்து குழந்தைகள் மற்றும் பெண்களிடம் கிறிஸ்துமஸ் பொதுக்கூட்டம் என்ற பெயரில் இந்துக் கடவுள்கள் இல்லை என்று மூளைச் சலவை செய்து மதமாற்றம் செய்வதாக தகவல் வெளியானது. இதனை தடுக்கச் சென்ற இந்து முன்னணி ஒன்றிய தலைவர் ராமகிருஷ்ணனிடம் மதம் மாற்றும் கும்பல் கொலை மிரட்டல் விடுத்ததுடன் அவரை அசிங்கமாகவும் திட்டியதாக இந்து முன்னணி சமூக ஊடகங்களில் பதிவிட்உள்ளது. இதையடுத்து இந்து முன்னணி சார்பாக காவல் நிலையத்தில் கிறிஸ்தவ மதமாற்ற கும்பல் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமசுக்கு முதல் நாளும் இதே போன்று உதகையில் ஒரு பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது இந்து மாணவிகளுக்கு பைபிள் வழங்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. அதே நாளில் குன்னூர் பேருந்து நிலையத்தில் அங்கு நின்றிருந்த மக்களிடம் பைபிள் வழங்க மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதாக இந்து முன்னணி குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
சென்ற வாரம் இதே போன்று கரூர் மாவட்டத்தில் பள்ளிகள் முன்பு நின்று பள்ளி குழந்தைகளிடம் மதம் மாற்றும் நோக்கத்துடன் கேக் மற்றும் பைபிள் புத்தகத்தை அளித்ததாகக் கூறப்படும் கிறிஸ்தவ மிஷனரிகள் மீது அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் புகார் அளித்தனர். ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையினர் மதமாற்றத்தில் ஈடுபட வந்தவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்து முன்னணி அமைப்பினரை கைது செய்தது சலசலப்பை ஏற்படுத்தியது. "கடவுள் நம்பிக்கையற்ற" கட்சியும் தலைவரும் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அந்நிய மதங்களை பின்பற்றுபவர்களின் ஆட்டம் அதிகரித்து விட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.