பாகிஸ்தானில் அட்டூழியம்: தண்ணீர் கேட்ட 4 பெண்களின் ஆடைகளை உருவி மானபங்கம்!
பாகிஸ்தானில் தண்ணீர் கேட்பதற்காக கடைக்கு சென்ற 4 பெண்களின் ஆடைகளை உருவி மானபங்கம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் தண்ணீர் கேட்பதற்காக கடைக்கு சென்ற 4 பெண்களின் ஆடைகளை உருவி மானபங்கம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான், பஞ்சாப் மாகாணம் பைசாலாபாத்தில் இந்த கொடுமையான சம்பவம் நடைபெற்றுள்ளது. 4 பெண்கள் சந்தையில் திருடியதாக கூறி அவர்களை சராமாரியாக தாக்கியுள்ளது முஸ்லீம் கும்பல். அதன்பின்னர் 4 பெண்களின் ஆடைகளை உருவி நிர்வாணப்படுத்தியுள்ளனர். அப்போது பெண்கள் தங்களின் ஆடைகளை கொடுத்துவிடும்படி கதறியபோது முஸ்லீம் கும்பல் கொடுக்க மறுத்து அடம்பிடித்துள்ளது.
மேலும், பொதுமக்கள் முன்னிலையில் குச்சியால் சராமாரியாக அடித்து துன்புறுத்தியுள்ளனர். சந்தையில் ஏராளமான பொதுமக்கள் இருந்தும் பெண்களை அடிப்படை முஸ்லீம் கும்பல் நிறுத்தவில்லை. கதறியும் அவர்கள் விடவில்லை. இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைளதங்களில் பதிவிட்டதில் போலீசார் கவனத்திற்கு சென்றுள்ளது. இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஆடையின்றி இருந்த பெண்களுக்கு ஆடையை வாங்கிக்கொடுத்து மீட்டுள்ளனர். மேலும், பெண்களை மானபங்கம் செய்த முஸ்லீம் கும்பலில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணீருடம் கூறும்போது, சந்தையில் கழிவுகளை சேகரிப்பதற்காக சென்றிருந்தோம். தாகம் எடுத்ததால் அருகில் இருந்த எலக்ட்ரிக்கல் கடையில் தண்ணீர் கேட்டோம். ஆனால் கடை உரிமையாளர் சதாம் என்பவர் கொடுக்க மறுத்து எங்களை திருட வந்ததாக குற்றம்சாட்டினர். இதன் பின்னரே எங்களின் ஆடைகளை உருவி நிர்வாணப்படுத்தினர். மேலும், எங்களை கண்மூடித்தனமாக தாக்கினர். இதனால் எங்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது எனக் கூறினர். இதே போன்றுதான் பஞ்சாப் மாகாணத்தில் சமீபத்தில் இலங்கை நாட்டை சேர்ந்த தொழிலதிபரை முஸ்லீம் கும்பல் உயிருடன் எரித்துக் கொன்றது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Dinamakar