கெடு வைத்த இந்தியா:48 மணி நேரத்தில் பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்!வெளியுறவுத்துறை அதிரடி!

Update: 2025-04-23 16:35 GMT

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கும் வகையில் பிரதம நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது

அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது அதாவது வாகா-அட்டாரி என்னை உடனடியாக மூட பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது மேலும் இந்தியாவிற்கான பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும் பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து செய்வதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது 

அதுமட்டுமின்றி இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் எனவும் பாகிஸ்தான் சென்றுள்ள இந்தியர்கள் மே ஒன்றாம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும் என்றும் மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் அறிவித்துள்ளார் 

Tags:    

Similar News