சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளுக்கு 63,246 கோடி நிதி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு!

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்திட்டத்திற்கு ரூபாய் 63,246 கோடி நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது .

Update: 2024-10-07 08:56 GMT

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்திட்டத்திற்கு ரூபாய் 63,246 கோடி நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது .இதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு. க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவை கூட்டம்  நடைபெற்றது .இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்திற்கு ரூபாய் 63, 246 கோடி நிதியை ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வேகமாக வளர்ந்து வரும் நகரமான சென்னை மிக முக்கியமான பொருளாதார மையமாகும். நகரத்திற்கு தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவது மிகவும் முக்கியம். பொருளாதார மையமாக சென்னை உள்ளதால் ஒரு விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 118 கிலோமீட்டர் நீளத்திற்கு 128 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமையும் வகையில் மெட்ரோ இரண்டாம் கட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றார். இந்நிலையில் சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கு ரூபாய் 63,246 கோடி நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததற்கு பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்திற்கு நிதி ஒதுக்க கோரி கடைசியாக தங்களை டெல்லியில் சந்தித்து நான் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அதற்கு ஒப்புதல் அளித்ததற்கு நன்றி. தமிழகத்தின் நீண்ட கால கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்ததன் மூலம் இந்த திட்டம் விரைவில் முடிவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது .இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மெட்ரோ திட்டத்திற்கு நிதி கோரியிருந்த நிலையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News