பிடிபட்ட 7 கிலோ தங்கம் - கோவை விமான நிலையத்தில் பரபரப்பு!

Update: 2021-07-04 05:29 GMT

துபாயில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் 7 கிலோ மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த ஆறு பேரை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை சார்ஜாவில் இருந்து கோவை பீளமேட்டிற்க்கு ஏர் அரேபியா விமானம் மாலை 4.30 மணிக்கு வந்தது. அப்போது பயணிகளிடம் சோதனை நடத்திய விமானத் துறை அதிகாரிகள் பேஸ்ட் வடிவில் தங்கத்தை கடத்தி வந்த ஆறு பேரை கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் 7.908 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது. இந்த கடத்தலில் ஹாஜி அப்துல், ஆறுமுகம், சுலைமான், டேனி இப்ராஹீம் ஷா, மாதவன் மற்றும் ராஜேந்திரன் ஈடுபட்டது விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. துபாயிலிருந்து 7 கிலோ மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்தவர்கள் கோவை விமான நிலையத்தில் பிடிபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இவர்கள் என்ன காரணத்திற்காக தங்கத்தை பேஸ்ட் வடிவில் கடத்தி வந்தனர் என்றும் இவர்களுக்கு வேறு யாருடனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: Simpliy

Similar News