அயோத்தியில் ராமர் கோயில் அமைந்தது இந்தியாவிற்கு பெருமை... RSS புகழாரம்..

Update: 2024-03-17 14:25 GMT

நாக்பூரில் நடந்த RSS அமைப்பின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அகில இந்திய பிரதிநிதி சபா குழுவின் கூட்டத்தில், அயோத்தி ராமர் கோயில் தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக மகாராஷ்டிராவில் அமைந்துள்ள நாக்பூரில் ஆர் எஸ் எஸ் அமைப்பின் முக்கிய முடிவுகள் தற்போது எடுத்து இருக்கிறார்கள். இக்கூட்டத்தில் பாஜக தலைவர் நட்டா, பொதுச் செயலாளர் சுனில் பன்சால், அமைப்புச்செயலாளர் பி.எல் சந்தோஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அயோத்தியில் ராமர் கோயில் பணிக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தும், ராமரின் வழிகாட்டுதலின் படி செயல்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடந்த ஜன.,22 நாளானது, உலக வரலாற்றின் ஒரு அற்புதமான நாள். இந்தியாவிற்கு அயோத்திகள் ராமர் கோயில் கட்டுமானம் சிறப்பாக எழுந்து இருப்பது இந்தியாவின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுதப்பட்ட கூடிய ஒரு தருணம். இக்கோயில் கட்டுவது என்ற தீர்மானம். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நடந்த ஹிந்து சமுதாயத்தினரின் போராட்டம், தியாகம், ஆன்மிகவாதிகள் மற்றும் மகான்களின் வழிகாட்டுதல், உறுதியான நிலைப்பாடு மூலம் எட்டப்பட்டது.


அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் அனைத்து மதங்கள், பிரிவுகள் மற்றும் பாரம்பரியங்களைச் சேர்ந்த தலைவர்கள், அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு இருந்தார்கள். ராமரின் கொள்கைகளின் அடிப்படையில் இணக்கமான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட தேசிய வாழ்க்கையை கட்டி எழுப்புவதற்கான சூழலை உருவாக்குவதை இது சுட்டிக்காட்டுகிறது. இது பாரதத்தின் தேசிய மறுமலர்ச்சியின் துவக்கத்திற்கான அறிகுறியாகும்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News