1௦௦௦ கிலோ குண்டுகளை ஏற்றிச் செல்லும் அக்னி 2: முதன் முதலாக இரவு நேரத்தில் ஏவப்பட்டு வெற்றி
1௦௦௦ கிலோ குண்டுகளை ஏற்றிச் செல்லும் அக்னி 2: முதன் முதலாக இரவு நேரத்தில் ஏவப்பட்டு வெற்றி
அணு ஆயுதங்களை தாங்கியபடி
கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று எதிரியின் இலக்குகளை 2,000 கி.மீ. தூரம் சென்று தாக்கி அழிக்கக் கூடிய அக்னி 2 ஏவுகணை ஏற்கெனவே ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த
ஏவுகணையின் செயல் திறனைக் கண்டறிய ஒடிசா மாநிலம் பலாசூரில் கடலோரப் பகுதியில்
உள்ள டாக்டர் அப்துல் கலாம் தீவில் இருந்து அக்னி ஏவுகணை 2 கடந்த சனிக்கிழமை இரவு ஏவப்பட்டது. இது வங்கக் கடல் பகுதியில்
நிர்ணயிக்கப்பட்ட இலக்கை குறிப்பிட்ட நேரத்தில் துல்லியமாக தாக்கி அழித்ததாக ராணுவ
அதிகாரிகள் கூறினர் .
இதுவரை நடைபெற்ற அக்னி
ஏவுகணை சோதனைகள் அனைத்தும் பகலில் நடத்தப்பட்டவை. முதல்முறையாக நேற்று முன்தினம் சனிக்கிழமை
இரவில் அக்னி ஏவுகணை சோதனை மிகவும் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
20 மீட்டர் நீளம், 17 டன் எடை கொண்ட இந்த
ஏவுகணை ஆயிரம் கிலோ எடை மிக்க வெடிபொருளை சுமந்துகொண்டு 2,000 கி.மீ. தூரம் வரை சென்று தாக்ககூடிய திறன் மிக்கது என அதிகாரிகள் கூறினர்.