குருநானக்கும் – நம்பிக்கையும் பகுதி – 1
குருநானக்கும் – நம்பிக்கையும் பகுதி – 1
இந்தியாவில் பிறந்த குரு நானக் நம்பிக்கையையும் உறுதிப்படுத்துதலையும் முதன்மையாக கொண்ட ஒரு மார்க்கத்தை நிறுவினார். வாழ்க்கையின் மறுப்புகளையும் நிராகரிப்புகளையும் கடுமையாக எதிர்த்தார். சீக்கிய மதத்தின் இறை தத்துவமான “அகால்-புருஷ்” அதாவது “அகன்ட பிரம்மே” “ ஏக இறைவன். அத்தகைய ஏக இறைவன் எல்லோர் மனதிலும் இருக்கின்றார். இந்த இறைவனை நாம் உணர்வதே உலகத்தழைகளிலிருந்து விடுபடுவதற்கான வழி.
இது எல்லா மார்க்கங்களுமே வலியுறுத்துகிற ஒன்று. ஆனால் சீக்கிய மார்க்கம் இதிலிருந்து சற்று வித்தியாசப்படுகிறது. இறைவனை உணர்ந்து கொள்வதற்கான வழிமுறைகளில் மற்ற எல்லா மார்க்கங்களை விடவும் ஈது எளிமையானதாக இருக்கிறது. இந்த உலகத்தின் பரபரப்புகளுக்கு நடுவிலேயே இருந்து கொண்டு இறைவனை உணரும் வழிமுறையை போதிக்கிறது, சீக்கிய மார்க்கம்.
ஏனென்றால் குரு நானக் தோற்றுவித்த சீக்கிய மார்க்கத்தை பொறுத்தவரை உலக நடைமுறையிலிருந்து விலகுவது தன் முன்பு இருக்கும் வாழ்வை “மறுப்பதாக “அதன் மீது அவநம்பிக்கை கொள்வதாக கருதப்படுகிறது . ஏற்றுகொள்லுதல் என்பது குருநானக் வகுத்த கொள்கைகளில் முதன்மையானதாக இருக்கிறது குரு நானக் வகுத்த வழிமுறை என்பது வாழ்வை துறந்து காடுகளுக்கு சென்று துறவறம் பூண்டு வாழும் வழிமுறை அல்ல. வாழ்வை அதன் இன்ப துன்பங்களோடு நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்வதே அவர் வகுத்த வழிமுறையாகும்.
குரு நானக் தோற்றுவித்த சீக்கிய மார்க்கத்தில் ஏக இறைத்துவம் ஆழமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏக இறைத்துவத்தோடு இறைவன் இல்லாத இடம் என்று எதுவுமே இல்லை ஏன்ற நிலையும் வலியுறுத்தப்படுகிறது.
குரு நானக் இன்றைய பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே கவிபாடும் ஆற்றல்களை பெற்ற இவர், ஆன்மீக நூல்களை எழுதியும், மற்றும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய ஞானியாகவும் விளங்கினார். இந்து மற்றும் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு இடையேயான பிரிவினைகளை கடந்து இரண்டிற்குபொதுவான கோட்பாடுகளை முன்வைத்தார். இவர் காலத்தில் இந்துக்களும் முஸ்லீம்களும் ஒரே அளவில் இவர் மார்க்கத்தை ஏற்று கொண்டனர்.