காஷ்மீரை போல் அயோத்தியில் ஒரு மாதத்திற்கு முன்பே 144 தடை! நல்லதே நடக்கும் நம்பிக்கையில் மக்கள்!

காஷ்மீரை போல் அயோத்தியில் ஒரு மாதத்திற்கு முன்பே 144 தடை! நல்லதே நடக்கும் நம்பிக்கையில் மக்கள்!

Update: 2019-10-17 10:12 GMT


அயோத்தியில் சில நாட்களுக்கு முன் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ராமர் கோவில் வழக்கின் தீர்ப்பு அடுத்த நவம்பர் மாதத்தில் வரக்கூடும் என்பதால் இந்த உத்தரவு போடப்பட்டது. இந்த தீர்ப்பு வரும் சமயத்தில் கலவரங்கள் வரக்கூடும் என்பதாலும், இதனை தடுக்க இந்த தடை உத்தரவு போடப்பட்டது.


டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி வரை இந்த 144 தடை உத்தரவு அயோத்யாவில் அமலில் இருக்கும். டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளாகும். அந்த நாளன்று ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் பாதுகாப்பு மேம்படுத்தப்படுவது வழக்கம். இந்த வருடம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளிலிருந்து நான்கு நாட்களுக்கு பிறகுதான் 144 தடை உத்தரவு நீக்கப்படவுள்ளது.


இதைபோல் சில மாதங்களுக்கு முன் காஷ்மீரிலும் இவ்வாறு தடை போடப்பட்டது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.  à®‡à®µà¯à®µà®¾à®±à¯ காஷ்மீரில் தடை விதித்த சமயத்தில்தான் அரசியல் சட்டமைப்பின் பிரிவு 370 நீக்கப்பட்டது. அதனால் அயோத்தியில் 144 தடை விதித்ததால் அங்கும் பெரிதாக ஒன்று நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்துக்கள் அனைவரும் நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்துக்களிற்கு சார்பாக வரும் என்றும், அயோத்தியில் ராமர் கோவில் காட்டும் வேலைகள் தொடங்கப்படும் இந்துக்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.


Similar News