வருகிறது தீர்ப்பு அயோத்தியில் 144 தடை உத்தரவு! அமையுமா ராமர் கோவில்?

வருகிறது தீர்ப்பு அயோத்தியில் 144 தடை உத்தரவு! அமையுமா ராமர் கோவில்?

Update: 2019-10-14 12:30 GMT

ராமர் பிறந்த ஊரான அயோத்தியில் பிரிவு 144 ஐ மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது. ராம் ஜென்மபூமி வழக்கின் தீர்ப்பு கூடிய விரைவில் வரவுள்ளது என்பதற்காக, பிரிவு 144 விதிக்கப்பட்டுள்ளது. இது டிசம்பர் மாதம் 10ஆம் தேதி வரை நீடிக்க உள்ளது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் டிசம்பர் 6ஆம் தேதி என்பது குறிபிடித்தக்கது. 


இந்த உத்தரவில் ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் பயன்படுத்துவதிலும் தடை உள்ளது. மாவட்டத்திற்குள் படப்பிடிப்பு நடத்தவும் தடை உள்ளது. மிக முக்கியமாக, தீபாவளி சமயத்தில் கூட பட்டாசுகளை விற்பனை செய்வதும் வாங்குவதும் அனுமதியின்றி அனுமதிக்கப்படாது. குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே பட்டாசு கடை வைக்க அனுமதி வழங்கப்படும்.


பிரிவு 144 கீழ்,  à®¨à®¾à®©à¯à®•à¯ அல்லது அதற்கு மேல் நபர்கள் ஒன்றாக சேர்ந்து இருப்பதற்கு தடை உண்டு. கலவரத்திற்காக மக்களை முன்பதிவு செய்ய காவல்துறைக்கும் அதிகாரமும் கிடைக்கிறது.


Similar News