சேமித்து வைத்த உண்டியல் பணத்தை பயன்படுத்தி விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்த 15 சிறுவர்கள் : கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்

சேமித்து வைத்த உண்டியல் பணத்தை பயன்படுத்தி விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்த 15 சிறுவர்கள் : கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்

Update: 2019-09-03 19:36 GMT

சென்ற ஆண்டை போலவே, இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா, தமிழகம் முழுவதும் மிக விமர்சியாக கொண்டாடப்பட்டது. பிரசித்தி பெற்ற விநாயகர் ஆலயங்கள் துவங்கி, பல்லாயிரக்கணக்கான இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது.


அந்த வகையில், கோவை வடிவேலாம்பாளையத்தை சேர்ந்த, 5 முதல் 14 வயதுடைய 15 சிறுவர்கள், தாங்கள் சேர்த்து வைத்த உண்டியல் பணத்தில், விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து, விநாயகர் சதுர்த்தியை கொண்டாடியுள்ளனர். முறையாக ஹோம குண்டம் வளர்த்து விநாயகரை பிரதிஷ்டை செய்த இவர்கள், தங்களின் தகுதிக்கேற்ப, சீரியல் செட் அமைத்து பந்தலிட்டனர்.




https://twitter.com/dinamalarweb/status/1168652414611800066?s=19



இது குறித்து தினமலர் செய்திகளிடம் அந்த சிறுவர்கள் கூறுகையில், "விநாயகர் சதுர்த்தி எங்கள் பண்டிகை. பெரிய அண்ணன்கள், ஒற்றுமையுடன் ஆண்டுதோறும் கொண்டாடுவதை பார்த்து வந்த எங்களுக்கு, நாமும் சிலை வைத்தால் என்ன என தோன்றியது. இதோ, எங்கள் உண்டியல் பணத்தில், ரூ.1500க்கு, 5 விநாயகர் சிலைகள் வாங்கி விட்டோம். இத்துடன், களிமண்ணில் சிறிய விநாயகரை நாங்களே செய்தோம்' என்றனர். பெரிய அண்ணன்கள் போன்று, 'பிளக்ஸ்' வைக்கலாம் என்று தான் நினைத்தோம். ஆனால், அந்த பணத்தில், 50 பேருக்கு அன்னதானம் செய்து விட்டோம். அடுத்த வருஷம், பெரிய அளவில் விழா நடத்தி, எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துவோம்", என்று கூறியுள்ளனர்.


ஜாதி வேறுபாடுகளை கடந்து விநாயகப் பெருமான் மக்களை ஒன்றிணைப்பார் என்று நம்பப்படுகிறது. பிளக்ஸ் வைப்பதற்கு பதிலாக அன்னதானத்தைத் தேர்ந்தெடுத்ததன் மூலம், ஹிந்து பண்டிகைகள் ஒற்றுமை, மனிதநேயம் மற்றும் கொண்டாட்டங்களுக்கானவை என்பதை இந்த சிறு குழந்தைகள் நிரூபித்துள்ளனர்.


Similar News