மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தினம்: கோவையில் வானதி சீனிவாசன் தலைமையில் பா.ஜ.கவின் மஹா சங்கல்ப யாத்திரை!!

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தினம்: கோவையில் வானதி சீனிவாசன் தலைமையில் பா.ஜ.கவின் மஹா சங்கல்ப யாத்திரை!!

Update: 2019-10-02 12:10 GMT


மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் அரசு சார்பிலும், அரசு சார்பற்ற முறையிலும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட மஹா ஸங்கல்ப யாத்திரையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார்.


கோவையில் நடைபெற்ற மகாசங்கல்ப நிகழ்ச்சியில் பிரம்மாண்டமான யாத்திரையை பாஜகவினர் நடத்தினர். நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் மற்றும் இளைஞர்கள் பங்கேற்ற இந்த எழுச்சி மிகு ஊர்வலத்தில் தேசியக்கொடிகள், பதாகைகள் ஏந்தி தேச பக்தி பாடல்களை பாடிக்கொண்டு ஏராளமானோர் சென்றனர்.


தேசியக்கொடியின் மூவண்ணங்கள் பூசப்பட்ட திறந்த வெளி வாகனத்தில் காந்தி வேடம் அணிந்த ஒருவர் மரியாதையுடன் அழைத்து செல்லப்பட்டார். ஏராளமான இளைஞர்கள் பின்பக்கம் மோடி முன்பக்கம் காந்தியின் நினைவை போற்றும் வகையில் 150 என பொறிக்கப்பட்ட வலைப்பின்னல் ஆடைகளை அணிந்து கையில் தேசியக்கொடி ஏந்தி ஊர்வலத்தில் சென்றனர்.


ஏராளமானோர் பிரதமர் மோடி – மகாத்மா காந்தியின் உருவங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை கையில் அணிந்து சென்றனர். மகாத்மா காந்திக்கு பிடித்த சாரே ஜஹான் சே அச்சா பாடலைப் பாடிக்கொண்டு பலர் எழுச்சியுடன் சென்றனர்.  


இறுதியாக நடைபெற்ற கூட்டத்தில் மகாத்மா காந்தியின் சுத்தமான இந்தியா குறித்த கனவுகளையும், காந்தியின் கனவுகளை மோடி அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதையும் குறித்து தமிழக பாஜக பொது செயலாளர் வானதி சீனிவாசன் சிறப்புரை ஆற்றினார்.







Similar News