சென்னை RSS அலுவலகம் - பயங்கரவாதிகளால் குண்டு வைத்து 11பேர் இறந்த நிகழ்வு எப்படி நடந்தது?

சென்னை RSS அலுவலகம் பயங்கரவாதிகளால் குண்டு வைக்கப்பட்டு 17 பேர் இறந்த துக்க நாள் இன்று.

Update: 2022-08-09 02:29 GMT

முடிவுறா அத்தியாயம் ஸ்ரீராம் ராமசுப்ரமணியம், சேஷாத்ரி, குமரிபாலன், பிரேம் குமார், மோகனா, லலிதா, தேசிகன், ராமகிருஷ்ண ரெட்டி, காசிநாதன், ராஜேந்திரன் மற்றும் ரவீந்திரன். யார் இவர்கள்? பல நூற்றாண்டுகளாக தங்களது ஸ்ரீராமரின் ஜன்ம ஸ்தலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்க இடைவிடாது போராடிவந்த ஹிந்துக்களின், ஒரு திடமான முன்னெடுப்பான 6 டிசம்பர் 1992 கர சேவைக்கு தக்க பதிலடி கொடுத்திட, ஹிந்துக்களை மனமுடைத்து நோகடித்து; அதன்மூலம் ஹிந்துக்களின் எழுச்சியை மட்டுப்படுத்திட, பாரதத்தை பீடித்திருக்கும் ஆக்கிரமிப்பு சக்திகளில் ஒன்றான இஸ்லாமிய பயங்கரவாதிகளால் ஹிந்துக்களின் மீது தொடுக்கப்பட்ட ஒரு தீவிரவாத வெடிகுண்டு தாக்குதலில் மாண்டு போனவர்கள். 


ஆம். 8 ஆகஸ்ட் 1993, சென்னை சேத்துப்பட்டிலுள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் மாண்டவர்களே மேற்குறிப்பிட்ட இந்த பதினொரு ஹிந்துக்களும். இந்த துன்பியல் சம்பவம் நமக்கு உணர்த்துவது என்ன? பாரதத்தின் பிள்ளைகளான ஹிந்துக்களின் ஒருங்கிணைப்பில், ஒற்றுமையில், உரிமைகள் மீட்பினை கிஞ்சித்தும் சகித்துக் கொள்ள முடியாத அந்நிய ஆக்கிரமிப்பு சக்திகள், ஹிந்துக்களின் ஒருங்கிணைப்பை, உரிமைகள் மீட்பினை சிதைக்க எந்த எல்லைக்கும் செல்வர்; தங்களது ஆக்கிரமிப்பு லட்சியத்தை அடைய பாரதத்தின் பிள்ளைகளையும் அழித்தொழிக்க சற்றும் தயங்க மாட்டார்கள் என்று உணர முடிகிறது. 


இதுவொரு போர்! படையெடுத்து வந்த ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இந்த மண்ணின் மைந்தர்களுக்குமிடையே, பல தலைமுறைகள் கடந்து நடைபெற்று வரும் ஒரு தொடர் போர். இந்த தொடர் போரில், பாரதத்தின் பிள்ளைகளான ஹிந்துக்களே வெற்றி பெறுவர். ஏனெனில் அந்நிய ஆக்கிரமிப்பு சக்திகள், ஹிந்துக்களை வீழ்த்தி, தங்களது மார்கங்களையும் கொள்கைகளையும் விஸ்தரிக்க முயலும் வேளையில், ஹிந்துக்களோ தங்கள் தாயகத்தை, பண்பாட்டை, வாழ்வியல் முறைகளை காக்க அந்நிய ஆக்கிரமிப்பு சக்திகளை எதிர்த்து போராடி வருகின்றனர். இது அவர்களது இருப்பதைத் தக்க வைத்துக் கொள்வதற்கான போர். ஆனால் அவர்களுக்கோ இது வெறும் அதிகார விஸ்தரிப்பு. 


8 ஆகஸ்ட் 1993 குண்டு வெடிப்பில் தரைமட்டமாக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தின் பெரும் பகுதியினை மறுபடி கட்டிட நிதியுதவி செய்ய முன்வந்த அன்றைய முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவின் அரசாங்க ரீதியான உதவியினை ஏற்க மறுத்து, ஃபீனிக்ஸ் பறவை போல் மீண்டெழுந்து, ஒரே வருடத்தில் பாதிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் அலுவலகத்தை கட்டியெழுப்பியது ஆர்.எஸ்.எஸ். 


இந்த பயங்கரவாதிகளால் குண்டு வைத்து நம்மில் சிலரை வேண்டுமானால் அழிக்க முடியும். ஆனால் நம்முள்ளிருக்கும் ஹிந்துப் பிரக்ஞையை ஒரு போதும் அழித்து விட முடியாது. இவ்வுலகில் கடைசி ஹிந்து இருக்கும் வரை ஹிந்து பிரக்ஞை இருக்கும், அவ்விதம் பாரதம் இருக்கும். எனவே, ஆர்.எஸ்.எஸ் மட்டும் ஃபீனிக்ஸ் பறவையல்ல. அது அங்கம் வகிக்கும் ஹிந்து சமூதாயமே ஃபீனிக்ஸ் பறவை தான்.


இஸ்லாமிய ஆக்கிரமிப்பு சக்திகளின் சிந்தனையில் பாரத தேசம் இன்றுவரை ஒரு முடிவுறா அத்தியாயமாகவே இருந்து வருகிறது. இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் பாரத தேசம் அவர்களுக்கு ஒரு முடிவுறா அத்தியாயமாகவே வைத்திட இந்த ஹிந்து தியாகிகள் தினத்தில் (ஆகஸ்ட் 8) உறுதிமொழி ஏற்போம். பாரத் மாதா கி ஜெய்!

Input & Image courtesy: RSS chennai Team 

Tags:    

Similar News