வியக்கவைக்கும் விஷ்ணு சிலை – அகழ்வாராய்ச்சி முடிவுகளில் ஆச்சர்யம்

வியக்கவைக்கும் விஷ்ணு சிலை – அகழ்வாராய்ச்சி முடிவுகளில் ஆச்சர்யம்

Update: 2019-11-02 02:50 GMT

ஆந்திராவின் திருப்பதியில் இருந்து 80 கிலோ மீட்டர் தூரத்தில் அவர்னமுகி நதியின் கரையில் அமைந்துள்ள “கோட்டிபரலு “ என்ற இடத்தில் பழங்கால நாகரீகம் இருந்ததற்கான ஆதாரங்களை இந்திய அகழ்வாராய்ச்சி மையம் கண்டுபிடித்துள்ளது.


இதன் காலம் கிமு ஒன்று அல்லது இரண்டாம் நூற்றாண்டு என கணிக்கப்படுகிறது. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கட்டுமானங்கள் பல்வேறு அளவிலான செங்கற்களை கொண்டு கட்டப்பட்டிருக்கிறது. 43 முதல் 48 சென்டிமீட்டர் கொண்ட பெரும்பாலான கற்கள் சதாவகனர் காலத்தவை அல்லது இஷ்வாகு காலத்தவையாகவோ இருக்கக்கூடும் அல்லது அதனோடு ஒப்பிடத் தக்கதாக இருக்க கூடும் என கருதப்படுகிறது.


இது போன்ற கட்டுமானங்கள் கிருஷ்ணா நதிக்கரையின் அமராவதியிலும், நாகர்ஜுனாகொண்டாவிலும் காணமுடிகிறது. இந்த இடத்திலிருந்து நாகரிகம் பெரிய பரப்பளவை உள்ளடக்கி , உயரமான மதில் சுவர்களுடன் வைத்துக் கட்டப்படுகிறது.


இந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டவைகளுள் விஷ்ணு சிலை ஒன்று மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சுமார் இரண்டு மீட்டர் உயரம் கொண்ட இந்த விஷ்ணு சிலை நான்கு கரங்களுடன் பீடத்தின் மீது நின்றவாறு காட்சியளிக்கிறது. இரண்டு கரங்களில் சங்கும் சக்கரமும் மூன்றாவது கரம் அபயமளிப்பது போலவும், நான்காவது கரம் கதிஹஸ்தத முத்திரையில் அதாவது இடுப்பில் கை வைத்து இருப்பது போலவும் காட்சியளிக்கிறது.


இந்த சிறையில் இருக்கும் பிரமாண்டமான தலைகிரீடமும் தோள்களில் தெரியும் பூணூலும் ஆடையின் மடிப்புடன் கூடிய வேலைப்பாடும் இது பல்லவர் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது. மேலும் இந்த அகழ்வாராய்ச்சியில் செம்பு காசுகள், ஈட்டி முனைகள், சிற்பங்கள், காதணிகள், சிறுவர்களின் விளையாட்டு குறியீடுகள் மற்றும் மதிப்பு மிக்க கற்கள் போன்றவை கிடைத்துள்ளன.


Similar News