ஆரோக்கியமில்லாமல் தவிக்கும் தி.மு.க மருத்துவர் அணி - பிழைக்க வைப்பாரா மு.க.ஸ்டாலின்? தத்தளிக்கும் உடன் பிறப்புகள்!

ஆரோக்கியமில்லாமல் தவிக்கும் தி.மு.க மருத்துவர் அணி - பிழைக்க வைப்பாரா மு.க.ஸ்டாலின்? தத்தளிக்கும் உடன் பிறப்புகள்!

Update: 2019-09-08 01:54 GMT

நேற்று(செப்டம்பர் 7) தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற மருத்துவ அணி கூட்டத்தில் தி.மு.க-வின் மருத்துவ அணி செயலாளரும் தி.மு.க மூத்த தலைவர் என்.வி.நடராஜன் அவர்களின் பேத்தியும், மற்றொரு தி.மு.க மூத்த தலைவர் என்.வி.என்.சோமுவின் மகளுமான கனிமொழி பங்கேற்காமல் இருந்தது அறிவாலய வட்டாரத்தில் பெருத்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.


இத்தனைக்கும் நேற்று நடைபெற்ற(செப்டம்பர் 7) தி.மு.க மருத்துவர் அணியின் மாநில நிர்வாகிகள் கூட்டம், மாவட்ட அமைப்பாளர்கள்- துணை அமைப்பாளர்கள் கூட்டத்திற்கான அறிவிப்பு இதே மருத்துவ அணி மாநில செயலாளர் பெயரில் முரசொலியில் ஆகஸ்டு 29 ஆம் தேதி அறிவிப்பு வெளியானதாம். வேடிக்கை என்னவென்றால் இப்படி ஒரு அறிவிப்பு தன் பெயரில் வந்ததே கனிமொழிக்கு தெரியாது என்று மின்னம்பலம் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. தனக்கே தெரியாமல் தன் பெயரில் அறிவிப்பு வந்திருப்பதைப் பற்றி தனது நண்பர்களிடம் பொங்கி தள்ளியுள்ளாராம் கனிமொழி.


22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் பெரம்பூர் தொகுதி கனிமொழிக்குதான் என்று தலைமையே உத்தரவாதம் தந்திருந்து கடைசியில் சீட் வழங்கப்படாததால் அதிருப்தியில் இருப்பதாக பேசப்படுகிறது. அண்ணா அறிவாலயம் பக்கம் எட்டிக் கூட பார்க்காமல் ஒதுங்கியே இருக்காறாம் கனிமொழி.


ஆரோக்கியம் இன்றி தவிக்கும் மருத்துவ அணிக்கு குலுக்கோஸ் ஏற்றுவாரா ஸ்டாலின் என எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர் உடன் பிறப்புகள்.


Similar News