மத வெறியை தூண்டும் ப.சிதம்பரத்தின் முகத்தில் கரி பூசுவோருக்கு ரூ.21,000 பரிசு ! முகமது ஆமிர் ரஷித் என்ற இளைஞர் அறிவிப்பு !!
மத வெறியை தூண்டும் ப.சிதம்பரத்தின் முகத்தில் கரி பூசுவோருக்கு ரூ.21,000 பரிசு ! முகமது ஆமிர் ரஷித் என்ற இளைஞர் அறிவிப்பு !!
“காஷ்மீரில் இந்துக்கள் அதிகமாக வாழந்திருந்தால், 370 சட்டப் பிரிவு நீக்கப்பட்டிருக்காது. அது முஸ்லிம்கள் அதிகம் வாழும் மாநிலம் என்பதால்தான் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டிருக்கிறது” என்று மதவெறியைத் தூண்டும் விதமாக ப.சிதம்பரம் விஷத்தை கக்கினார்.
அவரின் கருத்து, ஒருபுறம் இந்து - முஸ்லிம் மத வெறியை தூண்டும் கீழ்த்தரமான செயலாகவும், மறுபுறம் பாகிஸ்தானுக்கு ஆதரவான தேச துரோக செயலாகவும் அமைந்தது.
ப.சிதம்பரத்தின் இந்த கருத்துக்கு இந்திய முழுவதும் இருந்தும் கடும் எதிர்பும், கண்டனமும் எழுந்தது. முஸ்லிம்களும் இவரின் இந்த பேச்சை கண்டித்தனர்.
இந்த நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம், அலிகரைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர் அமைப்பின் தலைவரான முகமது ஆமிர் ரஷித் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, ப.சிதம்பரம் முகத்தில் கரி பூசுவோருக்கு 21,000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
இது தொடர்பாக ஆமிர் ரஷித் கூறும்போது, “காஷ்மீர் விவகாரத்தில் ப.சிதம்பரம் கூறியிருக்கும் கருத்து இந்து - முஸ்லிம் ஒற்றுமையை குலைக்கும் வகையில் உள்ளது. இந்த கருத்தைக் கூறியதற்காக அவரது முகத்தில் கரியைப் பூச வேண்டும். யாராவது ஒருவர் ப.சிதம்பரம் முகத்தில் கரியை பூசினால், நான் அவருக்கு பரிசுத் தொகையாக 21,000 ரூபாயை வழங்க முடிவு செய்துள்ளேன்" என்று குறிப்பிட்டார்.