23% இந்துக்களை அழித்த இன அழிப்பு! அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!!

23% இந்துக்களை அழித்த இன அழிப்பு! அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!!

Update: 2019-10-04 14:04 GMT

காஷ்மீர் விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவுக்கு உபதேசம் செய்யும் நேரத்தில், அந்நாட்டில் மக்களின் அடிப்படை உரிமை நசுக்கப்படும் சம்பவம் அரங்கேறியிருக்கிறது.


பாகிஸ்தானில் பொருளாதாரமும் கட்டுக்குள் இல்லை. பணவீக்கம் கைமீறி போய்விட்டது. பெட்ரோல் விலையை விட பால் அதிக விலைக்கு விற்கப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. எப்படியாவது மக்களை திருப்திபடுத்த வேண்டும் என்ற நோக்கில், காஷ்மீர் விவகாரத்தை கையில் எடுத்து அரசியல் செய்து வருகிறார் இம்ரான்கான்.


ஐ.நா சபையில் 50 நிமிடங்கள் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசியும், தனக்கு அடிப்படை வரலாறும், அரசியல் அறிவும் இல்லை என்பதை அந்த உரையின் மூலமே நிரூபித்துவிட்டார் இம்ரான் கான். காஷ்மீர் மக்களின் உரிமை குறித்து முழங்கும் இம்ரான் கான், அந்நாட்டு பராளுமன்றத்தில் என்ன நடந்தது.? என்பது குறித்து வாய் திறந்தால் அது ஆச்சர்யமே.


சமீபத்தில் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் முஸ்லீம் அல்லாத மக்கள் பிரதமாராக வர அனுமதிக்க வேண்டும் என்று கோரி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. வாக்கெடுப்புக்கு வந்த கணமே வாய்மொழி வாக்கெடுப்பின் மூலம் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசியல் சாசனமே ஜனநாயகத்துக்கு உட்பட்டு இல்லாமல், ஷரியா சட்டங்களை போல வடிவமைக்கப்பட்டிருக்கிறது.


இப்படி இருக்கும் நிலையில், காஷ்மீர் மக்களின் உரிமை குறித்தும், சிறுபான்மையினர் உரிமை குறித்தும் இம்ரான் கான் பேசுகிறார் என்றால், அது எவ்வளவு நகைப்புக்குரிய விஷயம். இந்தியாவில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருந்தாலும், அரசு அவர்களுக்கான சட்ட ரீதியிலான சுதந்திரத்தை கொடுத்துள்ளது. நாட்டின் ஜனாதிபதி பொறுப்பு வரையில் கூட முஸ்லீம்கள் வர முடியும். ஆனால் பாகிஸ்தானில் சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்களோ, கிறிஸ்தவர்களோ பிரதமர் பதவிக்கு வர முடியாது.


இந்தியா சுதந்திரம் பெற்ற பொழுது, இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானில் 23 சதவிகித இந்துக்கள் இருந்தனர். இன்றைக்கு வெறும் 2 சதவிகிதத்துக்கும் குறைவான இந்துக்களே உள்ளனர். இதிலிருந்தே புரிந்து கொள்ள வேண்டும். பலர் இனப்படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். உயிருக்கு பயந்து பலர் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதே புள்ளிவிவரத்தை இந்தியாவில் எடுத்து பார்த்தால், இந்தியா சிறுபான்மையினரை எப்படி கையாள்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.


இப்படி தன்னிடம் ஆயிரம் குறைகளை வைத்துக்கொண்டு, இந்தியாவிற்கு உபதேசம் என்ற போலி வித்தையை கையில் எடுத்து பாவனை செய்துகொண்டிருக்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்.


Similar News