தீவிரவாதிகள் ஊடுருவல் எதிரொலி : வேலூரில் அதிரடி சாமிங் ஆபரேஷன் 262 பேர் கைது !
தீவிரவாதிகள் ஊடுருவல் எதிரொலி : வேலூரில் அதிரடி சாமிங் ஆபரேஷன் 262 பேர் கைது !
தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளனர் என்ற உளவுத் தகவல் அடிப்படையில் போலீசார் உஷார் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மறுபுறம் விஷமிகள் சிலர் தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி மக்களை குழப்பி வருகின்றனர். பயங்கரவாதத்திற்கு ஆதரவாக தகவல் பரப்பும் விஷமிகளுக்கு போலீசார் கடுமையாக எச்சரித்துள்ளனர். அவர்களை சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
கோவை மாநகர சட்டம் - ஒழுங்கு போலீஸ் துணைக் கமிஷனர் பாலாஜி சரவணன் கூறுகையில் ''உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன; மக்கள் அச்சப்பட வேண்டாம். விஷமிகள் சிலர் தவறான தகவல்களை கிளப்பி வருகின்றனர்; நம்ப வேண்டாம்'' என்றார்.
கோவையில் பயங்கரவாதிகள் ஆறு பேர் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை தகவல் வந்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வேலுார் மாவட்டத்தில் தமிழக - ஆந்திர மாநில எல்லையில் 24 மணி நேரம் வாகன சோதனை நடந்து வருகிறது.இந்நிலையில் 'சாமிங் ஆபரேஷன்' என்ற பெயரில் வேலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 8:00 மணி முதல் நேற்று காலை 8:00 வரை 435 லாட்ஜ்கள் பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் சந்தேகத்தின் அடிப்படையில் 262 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதிகளை கண்காணிக்கும் சிறப்பு நுண்ணறிவுப்பிரிவு போலீசார் கோவையில் நடத்திய சோதனையில் சந்தேக நபர்கள் சென்னையைச் சேர்ந்த சித்திக் கோவை உக்கடத்தைச் சேர்ந்த ஜாகிர் உள்ளிட்ட மூவர் பிடிபட்டனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.