கர்நாடகாவில் 3 பேருக்கு துணை முதல்வர் பதவி: முதல்வர் எடியூரப்பா ஒதுக்கீடு!!
கர்நாடகாவில் 3 பேருக்கு துணை முதல்வர் பதவி: முதல்வர் எடியூரப்பா ஒதுக்கீடு!!
கடந்த வாரம் நடைபெற்ற எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை விரிவுப்படுத்தப்பட்டது. காங்கிரஸ் – ம.ஜனதாதளம் கூட்டணி அரசைப் போல அல்லாமல் ஸ்திரமான அரசை அமைக்க வேண்டி பா.ஜ.க மேலிடம் அறிவுறுத்திய நிலையில், துணை முதல்வர் பதவியை 3 பேருக்கு முதல்வர் எடியூரப்பா ஒதுக்கீடு செய்துள்ளார்.
துணை முதல்வர்களாக கோவிந்த் மக்தப்பா கரஜல், அஷ்வத் நாராயண், லக்ஷமன் சங்கப்பா சவடி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவிந்த் மக்தப்பா கரஜலுக்கு மட்டும் கூடுதலாக பொது பணித்துறை, சமூக நலத்துறை ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒதுக்கப்படாத துறைகளை முதல்வர் எடியூரப்பாவே கவனித்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.