மையத்திலிருந்து விலகிய 3 எம்.பி வேட்பாளர்கள் - வலதுபுறம் நகர்கிறதா மையம்?

மையத்திலிருந்து விலகிய 3 எம்.பி வேட்பாளர்கள் - வலதுபுறம் நகர்கிறதா மையம்?

Update: 2019-11-05 12:28 GMT

கடந்த பாராளுமன்ற தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்களாக போட்டியிட்ட அரக்கோணம் தொகுதி திரு.ராஜேந்திரன், கிருஷ்ணகிரி தொகுதி திரு. ஸ்ரீகாருண்யா மற்றும் சிதம்பரம் தொகுதி திரு. ரவி ஆகியோர் இன்று முன்னாள் மத்திய அமைச்சர் திரு. பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைத்து கொண்டனர். பெரியார் நாத்திகம் பேசிவந்த கமலின் கட்சியிலிருந்து 3 முக்கிய நிர்வாகிகள் பா.ஜ.க வின் பக்கம் சாய்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இதன் மூலம் மையம் வலது பக்கம் நகர்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.


இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் திரு.பொன்இராதாகிருஷ்ணன் கூறியதாவது :


கடந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக பாராளுமன்ற வேட்பாளர்களாக போட்டியிட்ட அரக்கோணம் தொகுதி திரு. ராஜேந்திரன், கிருஷ்ணகிரி தொகுதி திரு. ஸ்ரீகாருண்யா மற்றும் சிதம்பரம் தொகுதி திரு. ரவி ஆகியோர் இன்று (05/11/2019) என்னை நேரில் சந்தித்து தங்களை பா.ஜ.க.வில் இணைத்துக்கொண்டனர். பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் ஆளுமையைக் கண்டு தாங்கள் வியந்திருப்பதாகவும், நமது பிரதமரின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் தாங்களும் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், தங்களைப் போலவே இன்னும் பலர் பா.ஜ.க.வின் கொள்கையில் ஈர்க்கப்பட்டு தங்களைப்போல் இணைய இருப்பதாகவும் தெரிவித்தனர்.


இந்நிகழ்வின் போது தமிழக பா.ஜ.க.வின் அமைப்பு பொதுச் செயலாளர் திரு. கேசவ விநாயகன் அவர்கள் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




https://twitter.com/PonnaarrBJP/status/1191689569034309632

Similar News