சென்னையில் ஐ.டி ஊழியரை கடத்தி, மிரட்டி, பணம் பறித்த தி.மு.க பிரமுகர் உள்பட 3 பேர் சேர்ந்த கும்பல் கைது
சென்னையில் ஐ.டி ஊழியரை கடத்தி, மிரட்டி, பணம் பறித்த தி.மு.க பிரமுகர் உள்பட 3 பேர் சேர்ந்த கும்பல் கைது
சென்னையில் பிரபல மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞர் ஒருவரை காரில் கடத்திய தி.மு.க பிரமுகர் உள்ளிட்ட 3 பேர் சேர்ந்த கும்பல் அவரிடம் இருந்த 10,000 ரூபாயை பறித்து மிரட்டல் விடுத்துள்ளது.
சென்னை கேகே நகரை சேர்ந்தவர் ஸ்ரீகுமார். இவர் தாம்பரத்தில் உள்ள பிரபல மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அவரை கடத்தி பணத்தை பறித்து மிரட்டல் விடுத்துள்ள 3 பேர் குறித்து கே.கே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததுள்ளார்.
வடபழனி செல்வதற்காக ரேபிடோ செயலி மூலம் இருசக்கர வாகனத்தை புக் செய்துள்ளார். அப்போது மழை அதிகமாக பெய்து கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக சொகுசு காரில் வந்த சிலர், ஸ்ரீகுமாரிடம் பேச்சு கொடுத்து காரில் வலுக்கட்டாயமாக ஏற்றிக் கொண்டதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. காரில் இருந்த 3 பேர் திடீரென்று தன்னைத் தாக்கியதுடன் கத்தியைக் காட்டி மிரட்டி 10,000 ரூபாய் பணத்தை பறித்ததாகவும், கால் சட்டையை கழற்றி புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு 50,000 ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கே.கே.நகர் காவல்நிலையத்தில் ஸ்ரீகுமார் புகார் அளித்தார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ஓட்டுனர் சரவணகுமார், தி.மு.க நிர்வாகி விருகம்பாக்கம் தமிழ்ச்செல்வன், ஆட்டோ ஓட்டுனர் மணிகண்டன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்துள்ளனர்.