300 மில்லியன் இந்திய மக்கள் வறுமைக்கோட்டுக்கு மேல் கொண்டு வரப்பட்டுள்ளனர் - நிதி ஆயாக் CEO அமிதாப் காந்த்!

300 மில்லியன் இந்திய மக்கள் வறுமைக்கோட்டுக்கு மேல் கொண்டு வரப்பட்டுள்ளனர் - நிதி ஆயாக் CEO அமிதாப் காந்த்!

Update: 2019-10-05 10:47 GMT

2004 ஆம் ஆண்டுக்கும் 2018 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட கால இடைவெளியில் சுமார் 300 மில்லியன் இந்திய மக்கள் வறுமைக்கோட்டுக்கு மேல் கொண்டு வரப்பட்டுள்ளனர் என்று நிதி ஆயாக் CEO அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.


Micron Technology Incs Global Development Centre நிறுவன திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், ஒவ்வொரு இந்தியருக்கும் பயோமெட்ரிக் முறையிலான அடையாள அட்டை இருக்கிறது. கைப்பேசி இருக்கிறது. வங்கி கணக்கும் வைத்துள்ளனர்.


சீனா மற்றும் அமெரிக்கா இரண்டு நாடுகளும் சேர்த்து செலவிடும் இணையபயன்பாட்டின் ஒட்டுமொத்த அளவுக்கு இந்தியாவில் இணையசேவை பயன்படுத்தப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் இணைய கட்டணம் பத்தில் ஒரு பங்காகும்.


அதுவே அமெரிக்க ஐக்கிய நாடுகளுடன் ஒப்பிடும் போது, இருபதில் ஒரு பங்காகும். இதனால் Micron Technology நிறுவனம் மென்மேலும் வளர்ச்சியடைய நிறைய சாத்தியக்கூறுகள் உள்ளது.


செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் மற்றும் இணையத்தின் கருவிகள் போன்றவற்றுக்கு மின்னணு துறை முதுகெலும்பாக விளங்குகிறது. அதற்கான வளர்ச்சி வாய்ப்புகளை வழங்குவதில் இந்தியா முன்னோடியாக திகழ்வதாக குறிப்பிட்டுள்ளார்.


Similar News