31 ஆண்டு கால காஷ்மீர் வரலாறு மாறியது! ஒரு துப்பாக்கிச்சூடு கூட நடக்காத மாதம் ஆகஸ்ட் மாதம் !!
31 ஆண்டு கால காஷ்மீர் வரலாறு மாறியது! ஒரு துப்பாக்கிச்சூடு கூட நடக்காத மாதம் ஆகஸ்ட் மாதம் !!
கடந்த 1988 ஆம் ஆண்டு முதல் 31 ஆண்டு கால காஷ்மீர் வரலாற்றில் துப்பாக்கிப் பிரயோகம் எதுவும் இல்லாமல், ஒரு தோட்டாக் கூட சுட்ப்பட்டதாக பதிவு இல்லாத மாதம் சென்ற மாதம்தான் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறினார்.
இணைய தடைகள் பாதிக்கப்படுவது மோடி அரசுக்குத் தெரியும், ஆனால் உயிர்களைக் காப்பாற்றுவது அதைவிட மிகவும் முக்கியமானது என்று டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அஜித் தோவல் கூறினார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் பரவலான தகவல் தொடர்பு கட்டுப்பாடுகள் மற்றும் அதன் விளைவாக அங்குள்ள மக்களிடையே ஏற்பட்ட மனக்கசப்பு ஆகியவற்றை ஒப்புக் கொண்ட அதே வேளையில் சென்ற ஆகஸ்ட் 5 ந்தேதி முதல் இன்றைய நாள் வரை காஷ்மீரில் ஒரு தோட்டாக்கூட சுடப்படவில்லை. இது கடந்த 1988 ஆம் ஆண்டிலிருந்து இது வரையுள்ள 31ஆண்டுகளில் ஒரு புதிய பெருமைக்குரிய அனுபவமாகும் என்றார்.
தெற்கு பிளாக்கில் உள்ள பிரதமரின் அலுவலகப் பிரிவில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலான ஒரு உரையாடலில் மூத்த இந்திய பத்திரிக்கையாளர்கள் மற்றும் சர்வதேச பத்திரிகையாளர்கள் குழுவுடன் அவர் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் மேலும் கூறுகையில் “காஷ்மீர் 1988 ஆம் ஆண்டு முதல் அமைதியற்று காணப்பட்டது, இதற்கு காரணம் ஆப்கானிலுள்ள இரஷ்யப்படைகளை தோற்கடிக்க அப்போதைய பாகிஸ்தான் அதிபர் ஜியா-உல்-ஹக் ஆபரேஷன் டோபாக் (டோபக் என்றால் பாஷ்டோவில் ‘துப்பாக்கி’) என்கிற பயங்கரவாதிகளை ஏவிவிடும் ரகசியத் திட்டத்தை செயல் படுத்தினார். அதே திட்டத்தை சோவியத்துக்கு நண்பனாக இருந்த இந்தியா மீதும் அந்த திட்டம் திருப்பப்பட்டது. அதற்கு இரையானது காஷ்மீர்.