சிவசேனை தலைமை மீது 40 எம்.எல். ஏக்கள் கடும் அதிருப்தி! விடுதியில் எம்எல்ஏ க்கள் இடையே சண்டை, கைகலப்பால் மும்பையில் பரபரப்பு!
சிவசேனை தலைமை மீது 40 எம்.எல். ஏக்கள் கடும் அதிருப்தி! விடுதியில் எம்எல்ஏ க்கள் இடையே சண்டை, கைகலப்பால் மும்பையில் பரபரப்பு!
மகாராஷ்ட்ராவில் முதல்வர் பதவி தராததால் பாஜகவை பகைத்துக் கொண்டு கூட்டணியில் இருந்து வெளியேறிய சிவசேனா முதல்வர் பதவி தங்களுக்கே என்ற நிபந்தனையுடன் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க சென்ற வாரம் பேச்சு வார்த்தை நடத்தியது. அமைச்சரவையில் மேற்கண்ட இரு கட்சிகளுக்கும் அதிக இடங்களை வழங்கும் திட்டத்தை தயாரித்து அவர்களின் ஒப்புதலை பெற்றது.
ஆனால் இறுதி முதல்வர் தொடர்பான முடிவை சோனியாகாந்திதான் எடுப்பார் என்றும் இது தொடர்பாக டெல்லி சென்று அவரை நேரில் சந்திக்க சரத்பவார் மற்றும் சிவசேனா தலைவர்கள் சந்திப்பார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால் இரண்டு முறை அவர்கள் டெல்லி செல்ல திட்டமிட்டும் சோனியாவிடம் இருந்து எந்த சிக்னலும் கிடைக்காததால் நேற்று பவார் சோனியாவை டெல்லி சென்று சந்தித்து பேசினார்.
சிவசேனா தலைமையிலான கூட்டணி அமைக்கும் விஷயத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாததால் உததவ்தாக்கரேவின் நிலை தர்மசங்கடமான நிலையில் உள்ளது. மேலும் நேற்று பவார் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பேசுகையில் அவ்வவர்கள் வழியில் அவ்வவர்கள் செல்வதே நல்லது என கூறியது உததவ்தாக்கரேவை மேலும் குழப்பியது.
இந்த நிலையிலும் உத்தவ் தாக்கரே தொடர்ந்து 3 கட்சி கூட்டணி அமைப்பது தொடர்பாக முயற்சியை மேற் கொண்டிருப்பது அவரது கட்சியினருக்கும் சிவசேனை எம்எல்ஏக்களில் பெரும்பாலோனோருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே மும்பையின் மேற்குப் பகுதியான மலாட் எனுமிடத்தில் உள்ள பிரபல ரீட்ரீட் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள சிவசேனை எம்எல்ஏ-க்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
தலைமை மீதான கட்சியினரின் அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சிவசேனை கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இவ்விவகாரம் தொடர்பாக சில எம்எல்ஏ-க்கள் மத்தியில் சொகுசு விடுதியில் கைகலப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த நள்ளிரவில் அங்கு சென்ற ஆதித்ய தாக்கரே, அவர்களுடன் சமாதான முயற்சியில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.