உடற்பயிற்சி குறித்து அறிந்து கொள்ள வேண்டிய ஐந்து உண்மைகள்
உடற்பயிற்சி குறித்து அறிந்து கொள்ள வேண்டிய ஐந்து உண்மைகள்
எப்போதும் உடற்பயிற்சி
கூடத்தில் தவம் கிடப்பவரா நீங்கள். உடல்நலம் சார்ந்த பல விதிகளை கடுமையாக பின் தொடருபவரா
நீங்கள் உடற்பயிற்சி குறித்து அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய ஐந்து உண்மைகளை அறிந்து
கொள்ளுங்கள்.
- உடல்
எடையை குறைக்க ஏரோபிக் உடற்பயிற்சி மட்டுமே போதுமானது என்பது தவறு.
உடல் எடையை
குறைக்க நினைக்கும் பலருக்கும், உடல் எடையை குறைப்பது வேறு உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பை
குறைப்பதென்பது வேறு என்ற வித்தியாசம் தெரிவதில்லை. வெறும் உடல் எடையை மட்டுமே குறைப்பதில்
கவனம் செலுத்துகின்றனர் இது ஆரோக்கியமானதல்ல. உங்கள் தசையை வலுப்படுத்துவற்கென இருக்கும்
உடற்பயிற்சிகள் வேறு, உங்கள் தேவையற்ற கொழுப்பினை குறைப்பதற்கு உள்ள உடற்பயிற்சிகள்
என்பது வேறு. எனவே அந்த வித்தியாசத்தை தெளிந்து நம் தேவைக்கும், உடல்வாகிற்க்கும் ஏற்றவாறான
உடற்பயிற்சியை வடிமைத்து பயிற்சி செய்ய வேண்டும்.
- அதிகமான
வேர்வை வெளியேறினால், தேவையற்ற கொழுப்பு குறையும் என்பது தவறு.
பெரும்பாலனவர்கள்
தேவையற்ற வியர்வை வெளியேறினால் தேவையற்ற கொழுப்பு குறையும் என கருதுகிறார்கள். உதாரணமாக
ஒரு உடற்பயிற்சியஇ மிகவும் கனமான ஆடைகளை அணிந்து கொண்டு காற்றோட்டம் இல்லாத இடத்தில்
பயிற்சி செய்தீர்கள் எனில் இயல்பாகவே நீங்கள் வியர்த்து கொட்டுவீர்கள். எனில் இது உங்கள்
உடலில் உள்ள நீரை தான் குறைக்குமே தவிர, வியர்வையை அல்ல..
எனவே வியர்வை
சரியான வகையில் வெளியேற வேண்டும்.
- ஒரு
குறிப்பிட்ட இடத்தில் கவனம் செலுத்தி உடற்பயிற்சி
செய்வதன் மூலம் குறிப்பிட்ட இடத்தில் உள்ள கொழுப்பினை குறைக்க முடியும் என்பது தவறு.
உடற்பயிற்சி
சார்ந்து தவறாக பரப்பப்பட்ட தகவல்களுள் இது
முக்கியமானது. இடுப்பு பகுதிகளில் அதிக எடை கூடிவிட்டது என்பதற்காக இடுப்பை வளைத்தும்,
கையில் எடையை ஏந்தி இடுப்பு பகுதியஇ வளைக்கும் உடற்பயிற்சிகளை சிலர் செய்வதை நாம் பார்க்க
கூடும். இப்படி செய்வதால் இடுப்பு பகுதியிலுள்ள தசைகளின் பலம் கூடுமே தவிர, இதனால்
எடையோ அல்லது தேவையற்ற கொழுப்போ குறையாது. எனவே ஒரு உடற்பயிற்சியை வெறும் சமூக ஊடகங்களின்
உதவியுடன் தேர்வு செய்வதை விடவும், சரியான ஆலோசகரின் அலோசனையின் பேரில் உங்களுக்கென
பிரத்யேகமாக வடிவைமக்கபெற்று செய்வதே பலனை தரும். மேலும் மொத்த உடலும் இயங்குகிற வகையில்
சைக்கிலிங், ரன்னிங், ஜாகிங்க், நடைபயிற்சி போன்றவை பாதுகாப்பானது நல்ல பலன் தரக்கூடியதும்
ஆகும்.