50 கோடி ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை 28 சதவீதம் வரை உயர்த்த திட்டம் !
50 கோடி ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை 28 சதவீதம் வரை உயர்த்த திட்டம் !
ஊதியச் சட்ட மசோதா 2019, அந்தச் சட்டத்தின் படி, ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை 28 சதவீதம் வரை உயர்த்த தொழிலாளர் நல அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. ஊழியரின் குடும்பத்தினருக்கு நாளொன்றுக்கு உணவு, ஆண்டுக்கு துணி, ஆகியவற்றை கணக்கில் கொண்டு குறைந்த பட்ச ஊதிய உயர்வுக்கான வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது,
ஊதியத்தின் 10 சதவீதம் வீட்டு வாடகையாகவும், மின்சாரம், எரிபொருள், குழந்தைகள் கல்வி, மருத்துவ தேவைகள் ஆகியவை, ஊதியத்தில் 25 சதவீதமாகவும் இருக்கும் வகையில், குறைந்தபட்ச ஊதிய உயர்வு இருக்கும் என வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணிநேரத்தை 9 மணிநேரமாக அதிகரிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஊதியமானது தற்போது 175 ரூபாயாக உள்ளது. இதை 200 ரூபாயில் இருந்து 225 ரூபாயாக உயர்த்தும் வகையில் வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. நாடு முழுவதும் உள்ள 50 கோடி ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை மத்திய அரசு நிர்ணயம் செய்ய அந்தச் சட்டம் வழிவகை செய்கிறது.பொதுமக்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை கேட்டறிந்து, இந்த வரைவு அறிக்கையை இறுதி செய்ய தொழிலாளர் நல அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.