50-வது சர்வதேச திரைப்பட விழாவை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர் பிரகாஷ் ஜவடேகர், ரஜினிகாந்த், அமிதாப் பச்சன்!

50-வது சர்வதேச திரைப்பட விழாவை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர் பிரகாஷ் ஜவடேகர், ரஜினிகாந்த், அமிதாப் பச்சன்!

Update: 2019-11-20 11:42 GMT

கோவாவில் 50-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா இன்று முதல் 28-ந்தேதி வரை 9 நாட்கள் நடைபெற உள்ளது விழாவை மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர்,கோவா முதலமைச்சர், நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.



ஒன்பது நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மற்றும் இந்த விழாவில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன,விழாவின் நடிகர் ரஜினிகாந்துக்கு சினிமாதுறையில் சிறப்பாக சேவையாற்றியதற்காக மத்திய அரசு அவருக்கு ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ என்கிற பெயரில் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கப்படுகிறது.



விழா தொடங்கும் முன்னதாக பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது கூறிய அவர்,இன்று தொடங்கும் இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழாவில்  கலந்து கொள்ள உலகம் முழுவதிலுமிருந்து பல கலைஞர்கள் கோவா வந்துள்ளனர். இது நமது திரையுலகிற்கும், முக்கியமான தளமாகும் என்றார்.


Similar News