சவுதி அரேபிய இந்தியாவில் 7 லட்சம் கோடி முதலீடு! மோடியின் நடவடிக்கை குவிகிறது முதலீடு!

சவுதி அரேபிய இந்தியாவில் 7 லட்சம் கோடி முதலீடு! மோடியின் நடவடிக்கை குவிகிறது முதலீடு!

Update: 2019-10-01 03:07 GMT

இந்தியவிற்கு சவுதி அரசர் வந்து சென்றார். மோடியின் ஆற்றலை பாராட்டி பேசினார் இந்த நிலையில் அந்த நாட்டின் இந்திய தூதர் இந்தியாவில் சவுதி அரேபியா 7 லட்சம் கோடி முதலீடு செய்யும் என கூறியுள்ளார்.


உலக அளவில் அதிக எண்ணெய் வளம் மிக்க நாடு சவூதி அரேபியா. அந்த நாட்டின் இந்திய தூதர் டாக்டர் சவுத் பின் முகமது அல் சதி செய்தியாளருக்கு பேட்டி அளித்தார்.


பேட்டியின் போது இந்தியாவில் 7 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளதாகவும் இந்த முதலீடானது முக்கிய துறைகளில் முதலீடு செய்யப்படும் என தெரிவித்தார்.


மேலும் இந்தியா மிகப்பெரிய முதலீட்டு மையமாக திகழ்கிறது. சவூதி அரேபிய முதலீடு செய்வதற்கு ஏற்ற நாடு இந்தியா எனவும், சவுதியின் பிரசித்தி பெற்ற எண்ணெய் நிறுவனமான அரம்கோ நிறுவனம் இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேருவதற்கு முயற்சிகள் நடந்து வருகிறது


சவுதியின் நிறுவனமான அரம்கோ, மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடலோர சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பெட்ரோகெமிக்கல் துறையில் சுமார் ரூ.3 லட்சத்து 8 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளது.


இந்தியாவுக்கும், சவுதி அரேபியாவுக்கும் இடையே உள்ள பல்வேறு துறைகளில் நடைபெறும் வர்த்தகத்தை மிக பெரிய அளவில் விரிவுபடுத்தும் திட்டத்தை சவூதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் திட்டம் தீட்டியுள்ளார்.


ஈரானில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்வதை தடுப்பதால் இந்தியாவில் ஏற்படும் பற்றாக்குறையை சரி செய்ய சவுதி அரேபியா இறக்குமதியை அதிகரிக்குமா என அனைவரும் கேட்கிறார்கள்


இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பில் உடனான நட்பில் இந்தியாவிற்கு எந்த ஒரு இடையூறுகள் வந்தாலும் அதிலிருந்து இந்தியாவை நாங்கள் பாதுகாப்போம் என தெரிவித்த்தார்.


Similar News