6 ஆண்டு காலத்தில் 90 இலட்சம் பேர் வேலை இழந்தார்களா ?? போலி தகவல்களும் பரப்பிய சர்ச்சைக்குரிய நிறுவனமும்! விமர்சகர்களின் அலசல்.!
6 ஆண்டு காலத்தில் 90 இலட்சம் பேர் வேலை இழந்தார்களா ?? போலி தகவல்களும் பரப்பிய சர்ச்சைக்குரிய நிறுவனமும்! விமர்சகர்களின் அலசல்.!
கடந்த 6 ஆண்டுகள் என்பது பிரதமர் மோடி தலைமையில் தொடர்ந்து ஆட்சி நடைபெற்று வரும் காலக் கட்டமாகும். இந்த காலக் கட்டத்தில் 90 இலட்சம் பேர் வேலையை இழந்ததாகவும், இவர்கள் மோடியின் கருப்பு மற்றும் கள்ளப் பண ஒழிப்பு நடவடிக்கைக்குப் பின்பும், தொழில் சுணக்கத்தாலும் வேலையை இழந்ததாக சமீபத்தில் பல சர்ச்சைக்குள் சிக்கிய தொழிலதிபர் குடும்ப அறக்கட்டளையின் கல்வி நிறுவனம் வெளியிட்ட ஆய்வுகள் தெரிவித்தன. இவை போலித் தரவுகளை உருவாக்கி ஆய்வு தகவல்கள் என்ற பெயரில் வெளியிடப்பட்ட போலி புள்ளி விபர நடவடிக்கை என்றும் செய்தி விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பாக டெல்லியில் தொழிலதிபர் அஜீம் பிரேம்ஜி அறக்கட்டளை நடத்தும் பல்கலைக் கழகம் ஓன்று வெளியிட்ட ஆய்வுத் தகவலில் மோடி அரசை குற்றம்சாட்டும் விதத்திலும், களங்கம் கற்பிக்கும் விதத்திலும் கடந்த 6 ஆண்டு காலத்தில் 90 இலட்சம் இந்தியர்கள் இந்தியாவில் வேலை இழந்ததனர் என குறிப்பிட்டிருந்தனர். தவறான உள்நோக்கம் கொண்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற் கொள்ளப்பட்டதாகவும், வேலை இழந்தவர்கள் 90 இலட்சம் பேர் எனக் கூறும் இந்த நிறுவனம் எத்தனை நிறுவனங்கள் மூடப்பட்டன என்ற விவரத்தை குறிப்பிட்டிருக்க வேண்டும், அதேபோல எந்தெந்த நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பினார்கள் என்ற விபரத்தை தெரிவித்திருக்க வேண்டும்.
1 கோடி பேரை வேலை இழக்க வைத்த நிறுவனங்களின் எண்ணிக்கை அவை மத்திய ரக தொழிலகங்களாக இருந்தால் குறைந்தது 1 லட்சம் நிறுவனங்களாவது மூடப்பட்டிருக்க வேண்டும், மிகப்பெரிய தொழிலகங்களாக இருந்தால் அவை சில ஆயிரம் நிறுவனங்களாவது இருக்க வேண்டும். அந்த நிறுவனங்கள் எவை.. எவை என ஆய்வில் சுட்டிக் காட்டப்படவில்லை. மேலும் அது எத்தகைய தன்மையுள்ள வேலை இழப்பு என்பதையும் சுட்டிக் காட்டவில்லை.
பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் இயல்பாக வேலையிலிருந்து வெளியேறுபவர்கள் அல்லது வெளியேற்றப்படுபவர்கள், அல்லது மாற்று பணியிடங்களுக்கு செல்பவர்கள், வெளி நாடு வேலை தேடி செல்வோர், சுய விருப்பத்தின்படி ஓய்வு பெறுபவர்கள் இவற்களின் எண்ணிக்கையே தேசிய அளவில் ஆண்டுக்கு 10 இலட்சத்துக்கும் அதிகமான பேர் இருப்பர். அதே சமயம் புதிதாக வேலை கிடைத்தவர்களின் எண்ணிக்கை இதைவிட சில மடங்கு கூடுதலாக இருக்கும். புதிய வேலைவாய்ப்புகள் கடந்த 6 ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டும் 30 இலட்சத்துக்கும் அதிகமாக உருவாக்கப்பட்டுள்ளதாக தேசிய அளவிலான சராசரி புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கையில் இந்த 6 ஆண்டுகளில் 1.80 கோடி பேர் புதிய வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர் என்பதே உண்மையாகும், ஆனால் இந்த விபரங்களை அந்த நிறுவனம் மறைத்துள்ளது. மொத்தத்தில் நாடு முழுவதும் மோடி எதிர்ப்பாளர்கள் மூலம் ஒரு பீதியான தகவலை பரப்ப செய்வதே அந்த நிறுவனத்தின் நோக்கமாகும்.